உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயசஞ்சீவி ஐயர்

89

வாரமாகிலும் கழியுமுன் இவளை அழைத்துப்போவது பிசகென்றும் துரைஸானி முடிவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவள் மிகவும் ஏங்கிப்போய்ச் சோர்ந்து படுக்கையில் வீழ்ந்துவிட்டாள்; என்ன செய்வதென்பது தோன்றவில்லை; அது சசிக்க முடியாத காட்சியாக இருக்கிறது - என்றாள்.

அப்போது தந்தை, மகள் ஆகிய இருவரது தேகங்களும் பதறின. இருவரது கண்களினின்றும் கண்ணிர் வழிந்தது; மேலும் பேச மாட்டாமல் விசனத்தினால் உருகி இருவரும் உட்கார்ந்து போயினர்.

பெரிய:- (மிகவும் வருந்திய குரலில்) ஆகா! காதால் கேட்கவே சகிக்கவில்லையே! மனிதருக்கு இப்படியும் ஆபத்து வருமோ! இன்னதைச் செய்வ தென்பது தோன்றவில்லையே!- என்றார். உடனே யோசனையில் ஆழ்ந்தார்; பிறகு நூர்ஜஹானை நோக்கி, “அம்மா! நாம் ஒரு காரியம் செய்யலாம்; இன்று வந்த டிப்டி கலெக்டர் எந்த இடத்தில் தங்கியிருக்கிறார் என்பதை நாளைக்குக் காலையில் சாமாவையர் மூலமாக அறிந்துகொண்டு, அவரிடம் போய் விஷயங்களைச் சொல்லி பெண்ணையும் அவரிடம் ஒப்புவித்து விடுவோம்; அதுதான் சரியான காரியம்.”

நூர்:- (மிகுந்த விசனத்தோடு) அவரைப் பற்றியும் துரைஸானி சாமாவையரிடம் கேட்டாளாம். அவர் திரும்பி ஊருக்குப் போய்விட்டாராம்; இன்று காலையிலேதான் அவர் இந்த ஊருக்கு வந்தாராம்; அவருக்கு உத்தியோக விஷயத்தில் பெருத்த ஆபத்து வந்து விட்டதாம்; அவர் இன்று வைத்திய சாலைக்கு வரும்போது, நடுவழியிலிருந்த போலீஸ் ஸ்டேஷனில் அவரை இறங்கச் செய்து உள்ளே அழைத்துப் போனார்களாம்; கமிஷனர் துரை தஞ்சை கலெக்டர் துரையிடத்திலிருந்து வந்திருந்த தந்தி உத்தரவை அவரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/90&oldid=1251957" இலிருந்து மீள்விக்கப்பட்டது