பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மெளனப் பிள்ளையார் குழந்தைகளுடன் ஸ்நானம் பண்ண ஆரம்பித்துவிட்டால் கிணற்றண்டை ஒரு பக்கிங்ஹாம் சாக்கடையே தயாராகி விடும். போன மாதத்தில் ஒருநாள் துணிச்சலாக அவனிடம் சென்று சென்றமாத வாடகையைக் கேட்டேன். நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி இருக்கலாம் என் றேளே ?' என்று சிரித்து மழுப்பிவிட்டு நடந்து விட்டான். سيرته - { இன்னுெரு மாதம் கழிந்தது. மறுபடியும் தைரியமாக அவனை அணுகிக் கேட்டேன். ஏன் ஐயா, வீடு செளகர்யமா யில்ல்ை என்ருல் வாடகையே கொடுக்க வேண்டாமென்று சொன்னரே இங்கே என்ன வாழறது? ஒரு கூடைக்காரி கூட இந்த வீட்டை எட்டிப் பார்க்க மாட்டேங்கருள். கிணற்றங்கரை யெல்லாம் சாக்கடையா விருக்கு ; ஒரே மூட்டைப்பூச்சி மயம். இந்த லட்சணத்தில் வாடகை கேட்க வாயிருக்கா ? மூதேவி மாதிரி இருந்த வீட்டிலே ஒரு மாட்டை கட்டினேன். இரண்டு மூன்று குழந்தைகள் வந்ததில் லக்ஷ்மீ கரம் ஏற்பட்டது. வீட்டுக் காவலுக்கு நாய் வேறே. எல்லாம் நான் கொண்டுவந்தவை. வாடகை வேணுமாம்! வாடகை! உமக்குத் தெரிந்த விதத்திலே வசூலித்துக் கொள்ளும்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். . இவனே வீட்டைவிட்டுக் கிளப்ப ஏதாவது ஒரு யோசனை சொல்லுங்களேன்! -