பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்து வேட்டை {{ - 4. - * - இது என்ன ஜாதி மாம்பழம் புளிப்பு, நார் எல்லாம் இருக்குமா ?’’ என்று கேட்டான் நாகராஜன். பழக் கடைக்காரன் பழங்களேத் துணியால் துடைத்துக் கொண்டே, சாமி, இது ருமானி ஜாதி ; கற்கண்டு மாதிரி யிருக்கும். காலையில் ஒரு விலை சொல்லி எடுத்துப் போங்க ' என்ருன். அப்படியானுல் கற்கண்டு விலைக்குக் கொடுப்பாயா ?’’ என்று கேட்டு நாகராஜன் தன் ஹாஸ்யத் திறமையை அவ னிடம் காண்பித்துக் கொண்டான். என்ன விலைக்கு எடுப்பீங்க, சாமி ?? என்று கேட் டான் வியாபாரி. நீதான் சொல்லேன், நூறு என்ன விலைக்குக் கொடுப்பாய் ?’ ’ * r ' உங்களுக்கு எத்தனை பழங்கள் வேண்டும்?’’ அதைப்பற்றி உனக்கென்ன ? விலையைச் சொல் லேன் சரி சாமி ; நூறு எட்டு ரூபாய் ஆகும். ’’ ஐந்து ரூபாய் என்று போட்டுக்கொண்டு எனக்கு அரை டஜன் பழம் கொடுப்பாயா?' என்று கேட்டான் நாகராஜன்.

  • பழம் வாங்கற மூஞ்சியைப் பாருடா !' என்று கடைக்காரன் தன்னுடைய வேலைக்காரப் பையனைப் பார்த்துக் கூறினன். அந்தப் பையனும் பழம் வாங்க வந்த நாகராஜனுடைய முகத்தை உற்றுப் பார்த்தான்.

இது நாகராஜனுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது. கொஞ்சம் சூடாகப் பேச ஆரம்பித்தான். இப்படியாகக்