பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 56 - மெளனப் பிள்ளையார் அந்தர்த்தான மாகிக்கொண்டிருந்தது. நான் ஒரு நாள் சினிமாவுக்குப் போவதென்ருல் பன்னிரண்டு நாள் யோசிப் பேன். பிறகு நமக்கு இதெல்லாம் லாயக்கில்லை. பணம் கொடுத்து என்ன சினிமா வேண்டிக்கிடக்கிறது என்று சும்மா இருந்து விடுவேன். வீட்டிற்கு வந்து பார்த்தால் கதவு பூட்டப்பட்டிருக்கும். அம்புஜம் அவளுடைய பந்து மித்தி ரர்கள் சகிதம் எந்தச் சினிமாக் கொட்டகையில் இருக்கி ருளோ? யார் கண்டது? சிவனே என்று தெருத்திண்ணையில் படுத்துக் கிடப்பேன். நடுநிசி பன்னிரண்டு மணிக்கு அவர்கள் வந்து சேருவார்கள். அப்புறம் படம் அப்படி இருந்தது, இப்படி இருந்தது என்று கிரிடிவிஸம் தொடங்கி விடு வார்கள். - ரகசியமாக அம்புஜத்தைக் கூப்பிட்டு, 'இவர்களுக்கெல் லாம் இங்கு என்ன வேலை ? வந்தால் இங்கேயே சிலையாய்ப் பதிந்து போகிருர்களே ! இவர்களுக்கெல்லாம் தண்டத்திற் குச் செலவு செய்ய எனக்கு என்ன கலெக்டர் உத்தியோகமா கிடைத்திருக்கிறது?’ என்று கேட்டால், இல்லாமலென்ன ? நீங்கள் பில் கலெக்டர் இல்லையோ ? கலெக்டர் என்ன ஒசத்தி ?' என்பாள். 'சரி, அவர்களெல்லாம் இங்கு வந்து, சுமார் இரண்டு மாசம் ஆயிருக்கும் போலிருக்கே ! வந்தபடி போய்த் தொலை யறதுதானே ?' என்று கேட்டால், 'நன்ருய்ச் சொன்னேள் ? இவர்களெல்லாம் நம் வீட்டுக்கு வரத்தக்க மனுஷாளா என்ன ? என்னமோ கிறிஸ்மஸ் ஆச்சேன்னு வந்தா ? தினமுமா வரப்போருள்?' என்பாள். - அவள் சொல்வதில் ஒர் உண்மை இருக்கத்தான் செய் கிறது. அவர்கள் ஏன் தினமும் வரப்போகிரு.ர்கள் ? வந்தால் திரும்பிப்போவதுதான் கிடையாதே அவர்கள் முகாம் போட்டால் குறைந்த பrம் ஆறுமாசமாவது இல்லாமல் திரும்பிப்போளுல்தானே ? - கிறிஸ்மஸ்ஸுக்காக அம்புஜத்தின் அத்தை பெண் ஒருத்தி வந்திருந்தாள். நாலேந்து மாதத்திற்குள் அவள் திரும்பிப் போவதாகக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். இன்னும்