பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியுகக் கர்ணன் தேவர்களும் அசுரர்களும், முனிவர்களும் பெண்ணு சைக்கு ஆளாகி யிருக்கும்போது, கேவலம் நமது பால கோபால் மட்டும் அந்த ஆசையிலிருந்து தப்ப முடியுமா? ஒரு நாள் அவர் ஸினிமாவுக்குப் போய் விட்டு வந்தார். படம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு பிச்சைக்காரன் அவரைப் பார்த்துக் கையை நீட்டினன். பாலகோபால் அவனே லட்சி யம் செய்ய வில்லை. வெகு அலட்சியமாகத் தன்னுடைய கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார். அதே சமயத்தில் பெண்கள் வகுப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சித்ரலேகை இதைப் பார்த்து விட்டு, பாலகோபாலனின் கருமித்தனத்தை நினைத்து யோசித்துக் கொண்டே சென்ருள். - அவளைப் பார்த்துவிட்ட பாலகோடால் தம்முடைய செய்கையைக் குறித்துப் பெரிதும் வருந்தினர். அடாடா! இந்தச் சமயத்தில் இவள் வருவாள் என்று தெரிந்திருந்தால் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா யல்லவா போட்டிருப்பேன் என்று தம்மைத் தாமே நொந்து கொண்டார். வினிமாக் கொட்டையிலிருந்து வந்த அந்தப் பெண்ணி னுடைய அழகில், அவர்தம்முடைய மனத்தை ஏற்கெனவே பறிகொடுத்து விட்டிருந்ததுதான் அதற்குக் காரணம். பாலகோபால் வசித்து வந்த தெருவின் கோடியில் வெகு நாளாக ஒரு வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அதைச் சாதா ரண விடு என்று சொல்ல முடியாது. ஏறக்குறைய ஒர் அரண்மனையைப் போலவே இருந்தது. பாலகோபால் அந்த வீட்டை விலக்கு வாங்குவதற்காக அதன் சொந்தக்காரர் யார் என்பதைப்பற்றிப் புலன் விசாரித்துக் கொண்டிருந் தார். அப்படி விசாரித்ததில் அது ஒரு ஸப் கலெக்டர் விடு என்றும், அவர் வெளியூரில் உத்தியோகம் செய்து கொண்டி மெள. பி.-5 - o