பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மெளனப் பிள்ளே யார் ருப்பதால் வீட்டைப் பூட்டிக் கொண்டு போய் யிருக்கிருர் என்றும், அவருடைய ஒரே பெண் சித்ரலேகை என்பவளைச் சீமைக்குப் படிக்க அனுப்பி யிருக்கிருர் என்றும் விவரம் தெரிந்து கொண்டார். ஒரு நாள் அந்தக் கலெக்டர் வீட்டு வாசலில் குதிரை வண்டி ஒன்று வந்து நின்றது. வண்டியிலிருந்து ஸப் கலெக்டர் பெண் சித்ரலேகையும் வயதான ஒரு மாதும் வந்து இறங்கி ஞர்கள். அவள் சீமையில் படித்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய தகப்பனரும் தாயாரும் இறந்து போனுர்கள். இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு சித்ரலேகைக்குச் சீமையில் இருப்புக் கொள்ளவில்லை. அடுத்த கப்பலிலேயே ஏறி ஊருக் குப் பிரயாணமாளுள். நேராகத் தன் அத்தை வீட்டைத் தேடிச் சென்று கையோடு அவளேயும் அழைத்துக்கொண்டு, தனக்கு அப்பா வைத்து விட்டுப்போன வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அன்றைக்குத்தான் பாலகோபாலனும் அவளே முதல் தடவையாகப் பார்த்தது. அப்போதே அவளுடைய அழகில் தம்முடைய மனத்தைப்பறிகொடுத்துவிட்ட பால கோபால், சாப்பிடுகிற வேளையில் துரங்கிக்கொண்டும் துரங்கு கிற வேளையில் சாப்பிட்டுக் கொண்டு மிருந்தார். அவ&ா மறுபடியும் எப்படிப் பார்ப்பது ? எங்கே சந்திப்பது ? எவ் வாறு பேசுவது?’ என்றெல்லாம் அது முதல் மூன்று மாத காலமாக ஏக்கம் பிடித்துக் கிடந்தார். அதற்குப் பிறகு இப்போது மறுபடியும் அவள் தன்னைப் பார்க்கும்போதுதான இந்தச் சோம்பேறிப் பிச்சைக்காரன் கையை நீட்டித் தன்னு டைய கருமித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும் ? சித்ரலேகையை நாளேக்கே சந்தித்து அவளுடன் ஒரு மணி நேரமாவது பேசித் தன்னுடைய எண்ணத்தைத் தெரி இத்துவிடுவது என்று தீர்மானித்தார் பாலகோபால். on 3 பாலகோபாலனுக்குப் பெண்களின் குளுதிசயங்கள் இன்னும் தெரியாது. அவருக்குப் பணம் சம்பாதிக்கத்தான் தெரியும். அவர் தம்முடைய பதினேந்தாவது வயதிலேயே பொருளிட்டத் தொடங்கி விட்டார். இப்போது வயது முப்பதுகூட ஆகவில்லை. இதற்குள் ஒரு பெரிய எஸ்டேட்'