பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதமும் கவலையும் போஸ்ட்மாஸ்டர் சம்பந்தம் பிள்ளையின் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் ரத்தின முதலியார். எ ன் ே ைடு சண்டை போடுவதற்காகவே இந்த முதலியார் இங்கே குடி யிருக்கிருன். போன ஜன்மத்தில் இவன் எனக்குச் சத்துருவா யிருக்க வேண்டும். இப்பவும் சத்துரு. அடுத்த ஜன்மத் திலும் அப்படித்தான் போலும்' என்று சொல்லிக்கொண் டிருந்தார் முதலியார்வாள். அண்டை வீட்டுச் சண்டை மகோற்சவம் இப்படி நடந்து வந்தது. பெரிய ராம-ராவண யுத்தம், பாரத யுத்தம், டிராய் யுத்தம் இவைகளுக்கெல்லாம் ஒரு ஜானகி, ஒரு திரெளபதி, ஒரு ஹெலன் இவர்கள் காரணமானது போலவே முதலியார் - பிள்ளைவாள் யுத்தத்துக்கும் அவரவர்கள் மனைவிமார்களே காரணஸ்தராஞர்கள். 蜂 ரு சமயம் பிள்ளையின் மனைவி தண்ணியெடுக்கத் தோட்டத்துப் பக்கம் போனள். அங்கே கிணற்றண்டை விழுந்து கிடந்த ஒரு எச்சில் இலையைக் கண்டு பிரமித்துப் போனள். அவள் கையிலிருந்த குடம் தாகை நழுவிக் கீழே விழுந்தது. அவ்வளவுதான் புடைவையை வரிந்து கட்டிக் Y கொண்டாள். - பக்கத்து வீட்டு முதலியார் மனைவியைக் கையைத்தட்டிக் கூப்பிட்டு, 'உங்கள் வீட்டு எச்சில் இலையைப் போடுவதற்கு எங்க தோட்டம்தான இடம் ?' என்று கோபாவேசத் தோடு கேட்டாள். முதலியார் மனைவி எ ச்சி ல் இலையைத் த்ன் வீட்டுத் தோட்டத்தில்தான் போட்டதாகவும், அந்த இலையைப் பிள்ளைவாள் வீட்டு நாய் வந்து எடுத்துக்கொண்டு போய் அங்கே போட்டுவிட்டதாகவும் சொன்னுள்.