பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மெளனப் பிள்ளையார் சொன்னேனே ? என்று பிரமாதமாகப் பெருமை யடித்துக் கொண்டாள் கோதண்டராமய்யர் மனைவி. பிள்ளையார் கோயில் தெருவில் இருந்த பிள்ளை வேறு ஒருவரும் இல்லை. பள்ளிக்கூடத்தில் கோதண்டராமய்யரிடம் வாசித்துக்கொண் டிருந்த சாrாத் சுந்தரராமன் என்கிற பிள்ளைதான் ! அடாடா ! நமது வகுப்பிலேயே வாசித்துக் கொண்டிருந்த சுந்தரராமனுக்காக எங்கெல்லாம் சுற்றி அலைந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கும்போது கோதண்டராமய்யருக்கு ஆத்திரமும் அவமானமுமா யிருந்தது. இவ்வளவு தூரம் தன்னை அலைக்கழித்த சுந்தரராமனுக்கு அவரால் என்ன தண்டனே கொடுக்க முடியும் ? தமது பெண்ணையே அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்! لاكى)