உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கோட்டம்புக்காரென்றும் அறியக்கிடத்தலல்லது ஒருமலையினின்று மீண்டதாகவும் அம்மலைக்குப்போனதாகவுங் கொள்ளக்கிடையாமை காண்க. இத்துணையுங் கூறியவற்ருற்கண்ணகி 'செங்கதிர்மணி முடிச்சோலன்றிகழ் கொங்கநன்னட்டிடை'யே புக்காளென்றும், அங்காட்டு வருபுனனிர்த்தண்பொருநை சூழ்தரும் வஞ்சியிலே கோயில் கொண்டாளென்றும் கண்டுகொள்க. இவையெல்லாம் ஆராயாது கண்ணகிகோட்டம் கொடுங்கோளுர்க் கயலதாகிய செங்குன்றுமலையிலுள்ளதென்று துணிச்தாருமுண்டு. இனிக் கருவூர் வஞ்சியென்று பெயர்பெறுதலில்லையென்று மயங்குவாருமுளர். அவர்பொருட்டுச் சிலகாட்டுவல்.சிலப்பதிகாரத் துக்காட்சிக்காதைக்கண், "கூடார்வஞ்சிக்கூட்டுண்டு சிறந்த வாடாவஞ்சிமாநகர்" என்புழி அரும்பதவுரையாசிரியர் வஞ்சிமாநகர் என்பதற்குக் கரு ஆரிலே எனப் பொருள்கூறினர். புறப்பாட்டில், 'விண்பொருபுகழ்விறல்வஞ்சி" (11) என்புழிப்புறப்பாட்டுரையாசிரியர், வஞ்சி-கருவூர் என்ருர். அதன்கட் 'பூவாவஞ்சியுந்தருகுவனென்ருே (32) என்புழி, அவர், 'பூவாவஞ்சியென்றது கருவூர்க்குவெளிப்படை' யென்ருர், அதன்கண், - மாண்வினைநெடுந்தேர்வானவன்ருெலைய வாடாவஞ்சிவாட்டுகின்' (39) என்புழி அவர், 'மாட்சிமைப்பட்டதொழில்பொருக்கிய நெடிய தேரையுடைய சேரனழிய அவனதுஅழிவில்லாத கருவூரை அழிக்கு கினது' என்ருர். திவாகரநிகண்டு நூலார், 'கருவூர்வஞ்சி' என்ருர். பிங்கலங்தை நூலார், 'கருஆர்வஞ்சி' என்ருர், கச்சியப்பமுனிவர், 'கருஆரெணத்தக்கது வானத்ெதெழும் வஞ்சி' எனப் பேரூர்ப்புராணத்துட்கூறினர். இக் கருவூரென்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/131&oldid=889122" இலிருந்து மீள்விக்கப்பட்டது