உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறனுற லவியாச் சோலை விறன்மலைநாடன்' (382) எனக் கூறுவதன்கண் பேருர்முன்றுறையையுடையது மலைநாடென்று கொள்ளவைத்தார். இப்பேரூர் காஞ்சிவாய்ப்பேரூர் எனப்படுவ தாகும். ٹے [نئےh[ காஞ்சியாற்றின் முன்றுறையுடையதாதலுங்காண்க். இது கொங்குகாட்டுள்ள தலம். குடசிதம்பரம் எனப்படுவதுமிதுவே. மலையாளத்தார் பிதுர்சிரார்த்தம் முதலியவற்றை இத்தலத்திலே வந்து நடத்துதலே இன் றைக்கும் காணலாம். இவ்ஆருடையதாடு மலைநாடெனலால் கொடுத்தமிழ்நாடாகிய மலைநாடு இப்பக்கத்த தென்று தெளிகற்கு இதுவுமோர் துணையாதல்காண்க. இக்கருத் தானன்றே மின்னர்குடுமி நெடுவெற்பகங் கொங்கில்விழ் பணி நோய்' என நம்பியாண்டார் நம்பிகள் கூறினர். இனி முருகக்கடவுள் வள்ளியெனப்பெயரிய குறவர் திருமகளே வேட்டது தொண்டைநாட்டு மேற்பாடியூர்ப்புறத்துள்ள வள்ளி மலையின் கனென்பது கந்தபுராணத்துக் க ண் ட து. இங்ங்னம் அப்புராணங் கூருகிற்க, அருணகிரிநாதர் 'சேரர் மலைநாட்டில் வார முடன்வேட்ட சீலிகுறவாட்டி மணவாளா” எனப்பாடுதலான் இவ் வள்ளியைவேட்டது சோர் மலைநாட்டின்கண் எனக்கொண்டன ரென்று தெரியலாம். அவர் கொல்லிமிசை வாழ்கின்ற வல்லிபுனமே சென்று' எனவும் 'வல்லிபட்டதுன்னு கொல்லிமலை நாடா' எனவும் பாடுதலால் இவ்வல்லி யிருந்தபுனம் கொல்லிமலையின்கண் உள்ள தென்று கொண்டாராவர். இதனேயே மலைநாடெ ன்று அவர் கருதி னர் என்பது 'பருவமலைநாட்டின் மருவு கிளியோட்டு பழைய குற வாட்டி மணவாளா' என்பதனலறியலாம். இவர் கருத்தே பண்டைத் தமிழ் வழக்கொடு பொருந்துவ தென்பது திவாகரத்தும் பிங்கல்த் தும் வல்லியம் பொருப்பே கொல்லிமலையே' பொருப்பே கொல்லிமலையாகும்” -- யலாம்.' வல்லி-வள்ளிக்கு வடமொழிப்பெயர். வல்லியம் புலிக்குப் பெயரென்றுகொண்டு வல்லியம் பொருப்பாயிற்றென விதண்டை கூறின் வல்லியப்பொருப்பு என வருவதன் வி வல்லியம் பொருப் பென வருவதின்மையானும் அதற்கோர் மேற்கோளின்மையானும் சிறிதும் பொருந்தாதென்று தள்ளுக. __ - எனவும் 'வல்லியம் எனவும் வருதலான் இனிது தெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/20&oldid=889211" இலிருந்து மீள்விக்கப்பட்டது