உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் #23

இரா. மதிவாணன்,

கோயம்புத்துனர்.

அன்பு நண்பர் அவர்களுக்கு,

வணக்கம்,

உங்கள் கடிதம் கிடைத்தது.

"இந்த தேசத்திற்கு என்று தான் விமோசனம் ஏற்படுமோ?" என்று வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள்.

இந்த தேசத்துக்கு விமோசனம் என்பது சமீபத்தில் ஏற்படப் போவதில்லை என்றே நாட்டு நடப்புகள் அறிவிக்கின்றன.

தாங்களும் தங்கள் கட்சியினருமே பதவியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற அரசியல் தலைவர்கள், தகுதியும் திறமையும் இல்லாத போதும் சுயநலமும் பதவி வெறியும் பிடித்த அரசியல் கட்சிக்காரர்கள், அவர்களைப் போல தாங்களும் பதவியும் அதிகாரமும் அந்தஸ்தும் பெறவேண்டும் என்று தவிக்கிற சினிமா நடிகன்நடிகைகள்;அவர்கள் புகழைப் பாடி பணம் பண்ண முனைகிற பத்திரிகைக்காரர்கள்; அவர்கள் தயவுக்கு அலைந்து பணமும் புகழும் பெறுவதிலேயே கருத்தாக இருக்கிற எழுத்தாளர்கள் படித்துப் பட்டம் பெற்றதன் நோக்கமே ஆபிஸ்களில் கவுரவமான உத்தியோகம் பெற்று, கை நிறையச் சம்பளம் வாங்கி, சுகமாக வாழ்க்கை நடத்துவது தான் என நம்புகிற படிப்பாளிகள்.

ரசிகர் மன்றம் அமைப்பது-சினிமா பார்ப்பது-கிரிக்கெட் மேட்சுகள் பற்றிப் பேசிப் பொழுதுபோக்குவது- விகார நடனங்கள் ஆடுவது-போதைப் பொருள்கள் நாடுவது என்று அலைகிற இளைஞர்கள் எந்தக் கட்சி பதவிக்குவந்தாலும் லஞ்சமும் வன்முறையும் பல்வேறு ஊழல்களும் இருக்கத்தான் செய்யும்-அதனாலே யார் பதவிக்கு வந்தால் நமக்கென்ன!-இன்றையப் பாடு கழிந்தால் சரிதான், எப்படியாவது பணம் கிடைத்து வாழ்க்கை ஒட வேண்டும் என்ற மெத்தனப் போக்குடன் இருக்கும் மக்கள் கூட்டம்-இப்படி எல்லாம் இருக்கிற நாட்டுக்கு விமோசனமாவது, விடிவுகாலமாவது:

அன்பு

t:, ,