உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 3S3

ரேவதி

ராஜவல்லிவுரம் 26-2-33

அன்புள்ள ரேவதி,

வழக்கம்போல் ஊக்கத்தோடு படித்துக் கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். ஒரு வருஷத்துக்கு முன்பு - 1985 பிப்ரவரியில் நான் இந்த ஊரை விட்டுப் புறப்பட்ட போது, இசக்கி உபயோகிப்பதற்கென்று 3 இன்லண்ட் லெட்டர்களில் விலாசம் எழுதிக்கொடுத்து விட்டு வந்தேன். அவற்றில் ஒன்று கவனிக்கப்படாமலே ஒரு அட்டையினுள் இருந்தது. அதை இப்போது நான் உபயோகிக்கிறேன்.

நான் இந்த ஊருக்கு வந்து 24 நாட்கள் ஆகின்றன. இதுவரை 12 நாட்கள் திருநெல்வேலி ஜங்ஷன் - டவுண் போய் வந்தேன் (2 நாட்கள் பாளையங்கோட்டை.

பாளையங்கோட்டை-ஜங்ஷன் சிந்து பூந்துறை-டவுன் வட்டாரத்தில் எனக்கு நண்பர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நாலைந்து பேர்தான் இருப்பார்கள். இவர்களில் யாரையும் இதுவரை நான் பார்க்கவில்லை பார்க்கவேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இல்லை. பட்டிக்காட்டுப் பட்டணம் என்று சொல்வது விசித்திரமானதாக ஒவிக்கும். விநோதமுரண் பேரடாக்ஸ்-Paradox) ஆகத் தோன்றும், ஆனாலும் திருநெல்வேலி டவுண், பாளையங்கோட்டை போன்ற ஊர்களுக்கு இந்தப் பேர்தான் பொருத்தமாக இருக்கும். இவை நகரங்கள் (டவுண்) என்று பெயர் பண்ணிக் கொண்டாலும், பட்டிக்காட்டுத் தன் மைகளை இழத்துவிடாத நிலையிலேயே கானப்படும். பஜார்கள் என்று சொல்லப்படுகிற நாகரிகச் சூழல்கள் கூட பட்டிக்காட்டுத் தோற்றங்கள் கொண்டதாகவே இருக்கும்.

இந்த ஊர்களை எல்லாம் நீங்கள் நிதானமாகப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காலமும் வசதிகளும்தான் ஒத்துழைப்பதாயில்லை.

என்னுடைய மிகச் சின்ன வயசில் பாளையங்கோட்டை, திருநெல்வேலிப் பாலம் (பிற்பட்டு அது 'ஜங்ஷன்' என்று ஆகிவிட்டது), திருநெல்வேலி ஆகியவற்றை அந்தக்காலத்து பீட்டன் வண்டியில் உட்கார்ந்து அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எங்கள் பெரிய பெரியப்பா மக ஆவுடையப்ப அண்ணாச்சி ஜங்ஷனில் 'மாட்டு ஆஸ்பத்திரி (வெட்டரினரி