உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jš0 வல்லிக்கண்ணன்

ஆஸ்பிட்டல்) டாக்டர் ஆக இருந்தார். அந்தக் காலத்தில் ஆஸ்பத்திரியில் பீட்டன் இருந்தது. குதிரை பூட்டிய சொகுசு வண்டி அதில் எங்களையும் அவருடைய பிள்ளைகளையும் வைத்து, பாளையங்கோட்டை முதல் டவுண் வரை சுற்றிக் காட்டும்படி அண்ணாச்சி ஏற்பாடு செய்தார். காட்பரீஸ் சாக்லெட்டும் நிறையவே வாங்கித் தந்தார். அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும்.

அத்தாட்களில், பாளையங்கோட்டை- கைலாசபுரம் -

மீனாட்சிபுரம் - வீரராகவபுரம் - திருநெல்வேலி எல்லாம் தனித்தனி ஊர்களாகவே இருந்தன. பிறகு-பிறகு கைலாசபுரம், மீனாட்சிபுரம், வீரராகவபுரம் எல்லாம் ஒரே ஊராகி, ஜங்ஷன் ஆகிவிட்டது. போகப்போக, பாளையங்கோட்டையைப் பிரித்து வைத்த தூரம் தோன்றாதபடி, ரோடு நெடுகிலும் பெரிய பெரிய கட்டிடங்கள், வந்து விட்டன. அதுக்கு முந்தி டவுனும் ஜங்ஷனும் இடைவெளி இல்லாத ஊராக ஒன்றிப் போயின. கட்டிடங்கள், கடைகள் பெருத்துப் போயின. சினிமாத் தியேட்டர்கள் புதுசு.புதுசாகத் தலைதுாக்கின. இப்படி எத்தனையோ வளர்ச்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் - பட்டிக்காட்டுப் பட்டதாரிகளுக்கும் சென்னைப் பட்டணக் கல்லூரி மாணவர்களுக்கும் வித்தியாசங்கள் இருப்பது போல, இந்த ஊர்களுக்கும் இருக்கின்றன.

அன்பு

4);, ;,

ராஜவல்லிபுரம் 22-3-86

அன்புள்ள ரேவதி, நான் திருவனந்தபுரம் போவதற்கு முந்தி நீ எழுதிய கடிதத்தில் (2/3/86) நம் வீட்டு மல்லிகைச் செடி 30 பூக்கள் பூத்தது பற்றி எழுதியிருந்தாய். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. -

அதன் பிறகு அந்தச் செடியில் பூக்கள் தொடர்ந்து பூத்திருக்கும் என்று நினைக்கிறேன். கோடை காலத்தில் மல்லிகை அதிகம் பூக்கும். டிசம்பர் பூச்செடி மஞ்சள் நிறப்பூக்களை பூத்துள்ளது பற்றி அப்பா எழுதிய கடிதம் மூலம் தெரிந்து கொண்டேன்.

பெல்ட் அணிந்த நட்சத்திரக் கூட்டத்தின் பெயர் 'ஒரியன்'. CRION -