உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


போன்ற பேரறிஞர் பலரும் இப்பொழுது பெருத்த ஏமாற்ற மடைந்தனர். முதலில் பொது உடைமைச் சமூகம் என்பது வகுப்புப் பிரிவினைகள் அற்றதாயும், மக்களாட்சி முறையைக் கொண்டதாயும், உலக நாடுகளை அணைத்துக் கொள்ளும் போக்கை உடையதாயும் இருக்கவேண்டுமென்று கருதப்பட்டது. பாட்டாளி மக்களின் சர்வாதிகாரமும் சிறிதுகாலம் இருந்து மறைந்துவிடும் என்று கருதப்பட்டது. ஆனால் நடந்ததென்ன?

பொது உடைமைச் சமூகம் வகுப்புப் பிரிவினைகள் அற்றதாக மாறாததுடன், 'ஆளும் இனத்தார்' என்ற வலிமை மிக்க புதிய வகுப்பினர் முளைத்துச் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றனர். மேலும் தனிப்பட்டவர் வருமானத்திலும் ஏற்றத்தாழ்வு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. சிலரது வருவாய் வேறு சிலரது வருவாயைவிட எண்பது மடங்கு மிகுதியாகக் காணப்படுகிறது. அரசாங்கம் தனிப் பட்டோர் உரிமையை அடியோடு அடக்கியாளும் போக்கைச் சிறிதேனும் தளர்த்துவதற்கு விருப்பப் படவில்லை. 'பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம்' மக்களை ஒரே அச்சில் வார்த்தது போல் அணிவகுத்து நிறுத்துவதிலே வந்து முடிந்திருக்கிறது. அந்தச் சர்வாதிகாரமும் பொதுவுடைமைக் கட்சியினுடையதாக இல்லாமல் 'ஜி. பி. யு.' என்று சொல்லப்படும் ஈவிரக்கமற்ற இரகசியப் போலீசின் மூலம் ஆட்சிபுரியும் ஒரே தலைவனுடைய சர்வாதிகாரமாக இப்பொழுது அமைந்திருக்கிறது. அந்த இரகசியப் போலீசைப் பார்த்தே