உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

இட்லர், தன்னுடைய'கெஸ்டபோ' போலீசையும் அமைத்துக் கொண்டான். எனவே, பொது உடைமை ஆட்சியின் இயற்கையான முடிவு ஏகாதிபத்தியக் கொள்கை.

மக்களாட்சி : இதை ஜனநாயகம் என்று பொதுவாக அழைக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால், மக்களின் நன்மையின் பொருட்டு ஆளப்படும் ஆட்சியே ஜனநாயகம். இம்முறை இன்றைய உலகிற்கு ஏற்றதாக இருந்தாலும், இதிலும் பல குறைகள் உள்ளன. கட்சிப் பூசல் இவ்வாட்சியிலுள்ள பெரும் குறை. மேலும் சேவையுணர்ச்சியும், உண்மையுணர்வும் அற்ற பலர் தங்களுடைய செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி 'ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வது உண்டு . இதனால் தகுதியற்ற பலரும் அரசியலில் இடம் பெற வய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே ஜன நாயகத்தின் தூய்மை கெட்டு விடுகிறது. பொது நலம் புறக்கணிக்கப்பட்டுத் தன்னலம் இடம் பெறுகிறது.

மேற் கூறிய பல்வகை ஆட்சி முறைகளையும் கூர்ந்து ஆராயும்போது, எல்லாம் பழுதுற்றவையே என்பது தெளிவாம். ஒவ்வோர் ஆட்சியும் மக்களின் நலனையே முதற்குறிக்கோளாகக் கொண்டு துவங்கியது; ஆனால் இறுதியில் மக்கள் நலனைக் காற்றில் பறக்கவிட்டது. ஆனால் காந்தியம் இவைகளினின்றும் முற்றிலும் மாறுபட்டது.

வள்ளுவர் வகுத்துள்ள குறிக்கோள்களே காந்தியத்தின் குறிக்கோள்கள். ஆனால் அக்குறிக்-