உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

என்று நம்பினார். தாழ்த்தப்பட்டவர்களைப் பறையர் என்றோ, பள்ளர் என்றோ அடிகள் ஒருபோதும் கூறமாட்டார்; அவ்வேழை மக்களை ஆண்டவன் பெயரால் ‘அரிஜனங்கள்’ என்றும், ‘தரித்திர நாராயணர்கள்’ என்றுமே குறிப்பிடுவார்; தீண்டாமைக் கொடுமை இந்து சமுதாயத்தின் புரையோடிய புண் என்று அவர் கருதினர். அப்புண் ஆறும் வரை, இந்து சமுதாயத்திற்கு விடுதலை இல்லை என்றார்; சமுதாய விடுதலை இல்லாவிட்டால் நாட்டு விடுதலையும் கிட்டாது என்று விளக்கிக் கூறினர். “அரிஜன நலன் வேண்டுமா? சுயராச்சியம் வேண்டுமா ? என்று என்னைக் கேட்டால் அரிஜன நலனே முன்னதாக வேண்டும்” என்று கூறுவேன் என்கிறார் அடிகள்.

காந்தியடிகள் சாதிக் கொடுமையை அறவே வெறுத்ததோடு, தம் மனைவியையும் தம் கொள்கைக்கு இணங்கி நடக்குமாறு செய்தார்.

காந்தியடிகள் சாதிக்கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பிடிவாதக்காரர். தென்னாப்பிரிக்கா உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு, அவ்வரசாங்கத்தாரால் நாடு கடத்தப்பட்ட சில இந்திய நண்பர்கள் சாந்திநிகேதனத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் தங்களுடைய மனைவி மக்களையும், சொத்துக்களையும் விட்டுப் பிரிந்து வந்தவர்கள். அவர்கள் பொருட்டு அடிகள் ஒர் ஆசிரமம் ஏற்படுத்த விரும்பினார். முதன் முதலில் ‘கோச் ராப்’ யிலிருந்த ஒரு வாடகைக் கட்டடத்தில் ஆசிரமம் தொடங்கப்பட்டது. அப்போது அவ்வாசிரமத்தின் உறுப்பினர்கள் இருபத்தைந்து பேர். அவர்