பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - வாணிதாசன் என்வே?ல: திரு விளக்கே! தமிழ்மகளே! தித்திக்கும் தேனே! சீர்த்திமிகு தென்னவர்கள் மடிவளர்ந்த செல்வி உருமா ருப் பேரழகி சுன்னிஇளம் பெண்ணே! உன்னினத்து மொழிக்கெல்லாம் உயிர்தந்த தாயே! பெருங்கடலும் நீள்வானும் வான் கவிந்த மண்ணும் பிறந்தவுடன் பிறந்துவந்த குளிர்காற்றும் தீயும் ஒருங்கணேந்த புதுப்பொலிவே! தமிழ்த்தாயே! போற்றி! உனைப்பாடல் என்வே லை! பிறிது விரும் பேனே! l முகம் காட்டும் முத்தமிழை முத்தமிழின் தாரை முதிர்ந்த மலைத் தேனடையில் இல்லையெனக் கண்டேன்! அகம் புறமும் ஒளிவீசும் உன் அழியா மேனி! அழகுவிழிக் சூ விர்வீச்சின் தொகைஎட்டுத் தொகையே! பகைஒட்டும் வேல் பரணி! தாமரையாம் தாளில் பாட்டிசைக்கும் சிலம்புமணி மேகலை முப்பாலும் வகைவகையாய்ப் பூண்டவளே! தமிழ்த்தாயே! உன்னை வாழ்த்துவதே என்வேலை! பிறிதுவிரும் பேனே! 2 தென்னகத்துத் தமிழ்மக்கள பல்லோர்கள் வாயைத் திறவாத ஊமைகளாய்ச் செயலிழந்து போளுர்! முன்னகத்து நல்வாழ்வைப் புறப்பண்பை இன்று . முறைப்படுத்திச் செயல்படுத்த முனைந்து விட்டார் கண்டேன்! பின்னகத்துப் பகைநுழைவு பலபார்த்த துன்டே! பேடிகளை வீழ்த்துதற்குக் கூர்வாளா தேவை? என்னகத்துக் குடிகொண்ட செந்தமிழேl தாயே! என்வேலை உணவாழ்த்தல் பிறிதுவிரும் பேனே! 3