பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 95 நாடாண்ட அரசின்ருே மறந்திருந்தால் என்ளும்? நாவற்ருத் தமிழ்பாடி நயந்தோருக் கெல்லாம் காடாண்ட யானைமுதல் பொற்கலங்கள் ஈந்த காவலர்கள் இலை;அதனுல் கவிவாழ்க்கை இல்லை! வீடாண்ட தாய்மாரும் பெரியோரும் சேர்ந்தே மேன்மைமிகு நற்புதுவைத் தமிழ்ச்சங்கம் கண்டு மேடாண்ட புரவலர்போல் ஆண் டாண்டு தோறும் மிகுசிறப்பு கற்ருேர்க்குச் செய்கின்ருர்; வாழ்க! - 4 எழுத்தசைசீர் அணியாப்பு நனிகற்ற பின்னர் இன்கவிதை பாடுவதே மேலோர்கள் செய்கை! பழுத்திருக்கும் நற்புலமை பண்பட்ட இந்தப் பார்புகழும் புதுவைக்குத் தனிச்சொத்தாம் கண்டீர்! கழுதைக்கும் குதிரைக்கும் காட்டிடையில் வாழும் கருங்குயிற்கும் குரல் ஒன்ருே? மனம்போன போக்கில் எழுதுகின்ற எழுத்தெல்லாம் கவிதையென்று சொல்லி இன்றுசிலர் எழுதுகின்ருர்; தமிழ் வாழப் போமோ? 5 சிட்டாடு முன்றில்லில் தெருத்திண்ணை யோசம் சிறுபிள்ளை விளையாடச் சிரிப்புவரும் நெஞ்சில்! பட்டாடை உரல்சுற்றிப் பார்த்திருந்தால் என்னும்: வட்டாடு கின்றர்கள் அரங்கினிலே ஆட மரபொன்று வேண்டாவா? சிலபேர்கள் சீட்டுக் சட்டாடு கின்றர்கள் துருப்பெதற்குத் தேவை! தூயதமிழ் பாடுதற்கும் யாப்பணிகள் வேண்டும்! சாய்வாழ் வற்ருத சதுப்புநிலம் வேண்டும்! தாமரைகள் வாழ்வதற்குக் குளம் நிரம்ப வேண்டும்! காய்வாழக் கனிவாழ மரம்வாழ வேண்டும்! கார்வாழ மலைவாழக் கடல்வாழ வேண்டும்!