பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வாணிதாசன் சேய்வாழ ஈன்றெடுத்த தாய்வாழ வேண்டும்! சீர்ப்புதுவைத் தமிழ்ச்சங்கம் சிறப்புற்று வாழ வாய்வாழ வாழ்த்துகின்றேன்; என்னருமை மக்காள் மறவாதீர் தமிழ்ச்சங்கம் உம்முடைய சொத்தே! 7 பாட்டெழுதும் பாவலர்க்கு நாளுென்று சொல்வேன்! பரிசெண்ணிப் புகழெண்ணி எந்நாளும் எந்த நாட்டினிலும் பிறர்க்குழைப்போன் தோன்றியதே இல்லை! நாம்நமக்கே பாடுகின்முேம் நல்லதையே எண்ணி! கூட்டில்லாக் குயிலெதற்குக் கிளேயிருந்து பாடும்? குளிர் தென்றல் ஏன் வீசும்? பூஎதற்குப் பூக்கும்? வீட்டரசி தாயைப்போல் தமிழ்ச்சங்கம் உண்டு! - மேலோர்கள் இருக்கின்ருர்! வேறென்ன வேண்டும்? 8 ான்னருமை இளங்கவிகாள்! பிறநூல் கற்பீர்! இனிய தமிழ் வளர்த்திடுவீர்! கெஞ்சிக் கேட்பேன்! முன்னிருந்த தமிழ் மரபை அணியை யாப்பை முறையோடு கற்றிடுவீர்! தமிழின் வாழ்வைப் பின்னிருந்து குலைக்காதீர்! கட்டுச் சோறு பெரிதென்று நினைத்திடுவீர் வழுச் சொல் வேண்டாம்! இன்றிருந்து புதுப்பொலிவைப் புதிய நோக்கால் எழில்முடியைத் தமிழ்மொழிக்குச் சூட்டு வீரே! 9 பாட்டென்ருல் அது நாட்டைத் திருத்த வேண்டும்! பண்பென்முல் அதநெஞ்சில் பதிய வேண்டும் ! கூட்டென்ருல் அதில் வலிமை கூட வேண்டும்! கொள்கையெனில் அதில் நல்ல குறிக்கோள் வேண்டும்! காட்டென்ருல் உள்ளத்தைக் கற்ருேர் போலக் கைம்பொருளை யுந்திறந்து காட்டல் வேண்டும்! நாட்டென்ருல் நற்புகழை நாட்டு கின்ற நமது தமிழ் அரசைப்போல் நாட்ட வேண்டும்! 19