பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22, ஆாணிதாசன் வாழ்க்கை நம்பிக்கை யின்பிறப்பே நல்வாழ்க்கை உண்மை! நான்சொன்ன புதுமையில்லை; பலர் கண்ட ஆய்வாம்! தும்பிக்கையான நாம் தொழுதெழுந்தால் நூலின் தொல்வளனும் பெருஞ்சிறப்பும் தன்புலமை ஊற்றின் தெம்பிழக்கச் செய்ததெது? நான்சொன்னல் நீங்கள் திசைதிருப்ப ஏதேதோ சொல்லிடுவீர் என்மேல்! வம்புக்கே வந்திடுவீர்! வந்தாலும் நானே மறப்புலியே என்றென்றும் நீர்மறக்க வேண்டாம்! # என்மகளின் மாதரியின் அழகொளிரும் நீண்ட எழில்மாட முன்றில்லில் ஏதேதோ எண்ணிச் சின்ன இளம் சிறுகுருவிச் சிட்டிளேயர் கூட்டச் செந்தமிழைக் கேட்டிருந்தேன்; அகப்பொருளைக்கேட்டேன்! முன்னவர்கள் அகப்புறத்தை நமக்களித்த மேலோர் மூதறிவை நான் எண்ணி வியக்கின்ற நேரம் பின்வந்தாள் என்பெயர்த்தி பொன்னர சிக் குட்டி பேரிடியில் என அணைத்தாள்; இதுதானே வாழ்க்கை! 2 வாழைமடல் பார்த்திருந்தேன்; வாழைமரப் பூக்கள் வரிசையைநான் பார்த்திருந்தேன்; அப்பூக்கள் காயின் சூழலைநான் பார்த்திருந்தேன் கொல்லருலை வந்த துளைதுளைக்கும் உளியங்கள் நான்கண்டேன்; வாழ்வின் தாழ்நிலையைப் போக்குதற்கு யாரிங்கு நல்ல திடைக்கல்லைப் பெயர்த்தவர்கள் சொல்லட்டும் கேட்போம் ஏழையில்லை; செல்வரில்லை; என்கின்ற என்றன் இக்கொள்கை நிலைநாட்டல் என் வாழ்க்கை நோக்காம்! 3