பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்' 23. நான்குறிஞ்சி நிலத்தினிலே பிறந்தவனும் இல்லை! நல்லருவி பாய்ந்துவரும் நல்லருவிச் சாரல் தேன்குறிஞ்சிப் பூவாடும் பொரிவண்டும் இல்லை! தென்பொதிகைத் தமிழ்த்தென்றல் நான்இல்லை; இல்லை! வான்குறிஞ்சி முழுநிலவின் மையத்தைத் தேடி வருகின்ற வாலறிவோ எனக்கில்லை கண்டீர்! மான்குறிஞ்சி பாலையிலே நான் கண்ட துண்டு! வாழ்க்கையெனில் இன்பதுன்பம்! நம்பிக்கை வேண்டும்! 4 ஏடெடுத்தே எழுதத் தான் நினைக்கின்றேன்; என்றன் எழுத்தில்ைநல் சீர்பெற்றுத் திருப்புமுனே பெற்றுப் பாடெடுத்தே வருகின்ற பல்லோர்கள் என்றன் பனிமலையின் குளிர் அருவி நலன்வாழ்த்தும் என்றன் நாடெடுத்த எனதாசான் பாவேந்தன தந்த நற்கவிதை தனித் தமிழில் நாவூறும் செந்தேன்! கூடெடுத்தே நோய்நொடியை இந்நாட்டில் வாழ்வோர் குறைமுடிக்க நினைக்கிள்றேன்! அதுவே என் வாழ்க்கை 3