பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நீயும் நானும் சாந்துக் கல்லடி நீயெனக்கு!-நல்ல சந்தனக் கட்டை நானுனக்கு தீந்த மிழடி நீயெனக்கு!-இன்பத் திருக்குறளடி நானுனக்கு: முல்லைக் கொடியடி நீயெனக்கு:-ரற முளைத்த மரமடி நானுனக்கு! அல்விப் பூவடி நீயெனக்கு-தேன் அள்ளும் வண்டடி நானுனக்கு குட்டைப் புதுமலர் நீயெனக்கு!-பாகிக் குளத்து நீரடி நானு னக்கு! வட்ட நிலவடி நீயெனக்கு!-நீல் வானப் பரப்படி நீயெனக்கு!மாந்தளிர்த் தோப்பு நீயெனக்கு!-இசை வரிக்குயிலடி நானுனக்கு! தாமரை மொட்டடி நீயெனக்கு:-வானத் தங்கப் பரிதி நானுனக்கு! ஆடும் மயிலடி நீயெனக்கு-வான் அடர்ந்த முகிலடி நானுனக்கு! ஒடும் காவிரி நீயெனக்கு -முத்தம் உமிழும் கடலடி நானுனக்கு: குத்து விளக்கடி நீயெனக்கு!-தெய்க் கொழுந்துச் சுடரடி நானுணக்கு! நித்திக்கும் பாட்டடி நீயெனக்கு!-பொருட் செறிவின் சுவையடி நானுனக்கே! 8–2–64 வாணிதச به تد