பக்கம்:வாழையடி வாழை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் முடியரசர்

155

'வாழவிடார் சாகவிடார்; வாழ்வில் ஓர்நாள்
வகைகெட்டு வறுமையுறின் உதவ வாரார்:
ஏழையெனில் எதுசெயினும் ஊரார் கூடி
இதுகுறையாம அதுகுறையாம் என்று நம்மைத்
தாழவுரைத் தின்புறுவர்; செல்வன் என்ன
தகிடுதத்தம் செய்தாலும் தாயம் போட்டு
வாழவென்றே காக்கைபிடித் தலைவர் அந்தோ!
வாழ்கின்றார் மனிதரெனும் பெயருந் தாங்கி'

இப்பாடலில், ஊரார் பற்றி உளம் எரிந்து கவிஞர் உரைக்கும் கருத்துகளை காண்கின்றாேம்.

காதலியைக் காதலன் சிற்றுார்க்கு அழைத்துச் செல்கின்றான்.வழி கடந்து செல்கையில் காதலியின் காலில் முள் தைத்தது. காதலன் தன் உள்ளத்தில் அம்முள் தைத்தது போன்று துடிக்கின்றான்!. 'இனி இவ்வாறு சிற்றுார்க்கு அழைத்து வந்து உனக்குத் துன்பம் தரமாட்டேன்!' என்கிறான் காதலன். காதலி அவனை மறுத்து, "சீதை 'இராமன் இருக்குமிடம் அயோத்தி' என்றது போல, அவன் இருக்குமிடமே அவளுக்கு இன்பப் பூங்காவாகும்” என்கிறாள்.


மென்காலில் முள்தைத்த தென்ன, நெஞ்சில்
வேல்குத்திக் கிழித்ததுவே றொன்றும் பேசா
தென்காதல் மிகுதியினால் குனிந்து முள்ளை
எடுத்தவளை வருத்தாதே மன்னிப் பாய்நீ!
என்மீது சினந்தனையோ? இனிமேல் இங்கே
வருமெண்ணம் இல்லை இல்லை’ என்றேன்; பாவை
"என்னென்ன சொல்லுகிறீர் அத்தான் நீங்கள்
இருக்கின்ற இடமேதான் இன்பப் பூங்கா!"


துன்பம் துணையாக நாடி இன்பம் பெறும் இணைகள் வாழட்டும்! காதல் வானில் களிப்புடன் பறக்கட்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/157&oldid=1337922" இலிருந்து மீள்விக்கப்பட்டது