உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

வாழையடி வாழை


‘குழந்தை இன்பம் இயற்கை அளிக்கும் இன்பத்தினும் இனிமை சான்றது என்கிறார் கவிஞர்:

'வெண் முகில்சூழ் மலைமுகடும் முகட்டி னின்று
வீழ்ந்ததிரும் அருவிகளும் வண்ணப் பூவால்
கண்கவரும் செடிகொடியும் கொடிகள் தாவிக்
காட்டுகின்ற மரத்தொகையும் தென்றற் காவின்
பண்சொல்லும் வண்டுகளும் மாலை வானில்
படர்கின்ற செந்நிறமும் காதல் நங்காய்!
விண்மதியும் தருமின்பம் என்றன் பிள்ளை
விளையாடும் காட்சிதரும் இன்பம் ஆமோ'.

குழந்தை இன்பத்தில் உள்ளம் குளிர்ந்த கவிஞர் தொழிலாளியின் துயரம் கண்டு மனம் சோர்கிறார்.

மூச்சடக்கிக் கடலகத் தேமூழ்கி நல்ல
முத்தெடுக்கும் தொழிலாளி வாழ்க்கை தன்னில்
மூச்சிருக்க வேண்டியநல் வசதி இல்லை’

என்று முத்தெடுக்கும் தொழிலாளியின் துயரத்தினைச் சித்திரிக்கின்றார்.

மொழியுணர்ச்சியே நமக்கு வேண்டுவது என்று கவிஞர் முடியரசர்,

‘மணவினையில் தமிழுண்டோ? பயின்றார் தம்முள்
வாய்ப்பேச்சில் தமிழுண்டோ? மாண்ட பின்னர்
பிணவினையில் தமிழுண்டோ? ஆவ ணத்தில்
பிழையோடு தமிழுண்டு! கோவில் சென்றால்
கணகணவென் றொலியுண்டு; தமிழைக் கேட்கக்
கடவுளரும் கூசிடுவர்; அங்தோ! அந்தோ!
அணுவளவும் மொழியுணர்ச்சி இல்லா நாட்டில்
ஆத்திகரே! இறையுணர்ச்சி வளர்வ தெங்கே?'

என்று ஆத்திகம் பேசுவோரை கோக்கி ஆத்திரத்துடன் முழங்குகின்றார்.

‘இனத்திற்குள் பகைகொண்டு சாதிச் சேற்றில் இணைந்திருந்த'கவிஞரைக் கரைசேர்த்துப் பின்னர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/158&oldid=1337943" இலிருந்து மீள்விக்கப்பட்டது