பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பெரும் ஆராய்ச்சிகள் 79

முனைந்தனர். பல உயிரியலறிஞர்கள் உண்மையில் பெரும் பாலானவற்றில் மெண்டலின் விதிகள் செயற்படுவதையும் கண்ட னர். ஒருசிலவற்றில் ஆராய்ச்சி முடிவுகள் முடிந்த முடிபுகளாக ஏற்படவில்லை : அல்லது முற்றிலும் முரண்பாடாகவும் இருந்தன. இதனால் உயிரியல் அறிஞர்கள் ஒரே குழப்பத்தில் தத்தளித்தனர். இந் நிலையில் தாமஸ் ஹண்ட் மார்கன் என்பார் ஒருவிதய பழ ஈக்களில் தம்முடைய அககறையைக் காட்ட நேர்ந்தது.

போாசிரியர் மார்கன் 1907 இல் தம்முடைய ஆராய்சசியைத் தொடங்கினார் : அக்காலததில் கொலமபியா பல்கலைக் கழகத்

படம்-24. தாமஸ் ஹண்ட் மார்கன் (1868-1945)

தில் இவர் பணியாற்றி வந்தார். அவர் சோதனைப் பொருளாகக் கொண்ட பழ ஈயின் ஆணும் பெண்ணும் குடும்பக் கட்டுப்பாட்டில் கம்பிக்கை வைக்கவில்லை ! பன னிரண்டு நாட்களில் அவை இனப் பெருக்கத்திற்குத் தயாராக இருந்தன ; அடுத்த பன்னிரண்டு நாட்களில் ஒவ்வொரு பெண் ஈயும் கிட்டததட்ட 300 குஞ்சுகளைப் பொரிக்கின்றன. சாதாரணமாக இரண்டாண்டுக் காலத்தில் அறுபது தலைமுறைகளைப்பற்றித் தெரிந்துகொண்டுவிடலாம்.