பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வாழையடி வாழை

கிறிஸ்து பிறந்ததிலிருந்து இன்றுவரை கணக்கிட்டால் மானிட இனத்தில் அறுபது தலைமுறைகள் ஆகின்றன மேலும் அந்த ஈக்களிடம் எளிதில் பிரித்துக் கண்டறியககூடிய வேறுபாடுகளும் உள்ளன ; இந்த ஈக்கள் மிகச் சிறியனவாக இருப்பதால் அவற்றை ஒரு சிறிய கண்ணாடிப் புட்டியில் அடைத்து வைததுவிடலாம் : உணவுக்கும் அதிகச செலவில்லை. இந்த உயிரினத்திடம் இத்தனை செளகர்யங்களிருபபதால் இவை அறிவியலில சிறந்த சோதனைய பிராணிகளாகத் திகழ்கின்றன. அநத இனம் பூண் டற்றுப போவதற்கே வழியில்லாமல் மார்க்கண்டேயத்துடன் வாழும் என்றும் துணிந்து கூறலாம்.

இந்த ஈக்களைக் கொண்டு பேராசிரியர் மார்கன் மெண்டலின் அடிப்படை விதிகளில் யாதொரு மாற்றமும் இல்லை என்று காட்டி னார். அன்றியும். மெண்டல் கருதியவாறு மரபுவழிப பொறி யமைப்பு அவ்வளவு எளிதாக இல்லை என்றும் நிலை நாட்டினார். ஜீன்கள் செயற்படுவதில் பல சிக்கல்கள் உள்ளன என்றும், பல சூழ் நிலைக் கூறுகளும் ஜீன்களின்மேல் செல்வாக்குப் பெறுகின்றன என்றும் காட்டினார். மார்கனின் ஆராய்சசியில் அவருடைய மாணாக்கர்கள் பெரிதும் துணை செய்தனர். அம் மாணாக்கர்கள் அந்த ஈக்களின் நூற்றுக்கணக்கான சிறப்பியல்பு வாய்ந்த ஜீன்’ களை அடையாளங் கண்டதுமன்றி, அந்த ஈக்களின் கிறககோல் களில் அவை அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டுக் காட்டினர். மருத்துவமனையில் மருத்துவர் குறிப்பிட்ட பல்வேறு மருந்துக் கலவைகளை எளிதாக ஆக்குவது போலவே, அவர்கள் குறிபபிட்ட எந்த விதமான ஈக்களையும் உற்பத்தி செய்து காட்டினர். சிறிது காலத்திற்குப் பின்னர் பேராசிரியர் முல்லர் என்பார் புதிர்க் கதிர் களைக் கொண்டு இந்த ஈக்களின் ஜீன'களில் எண்ணற்ற மாற். றங்களை விளைவிக்கலாம் என்று மெய்ப்பித்தார். பேராசிரியர்கள் இருவருக்கும் நோபெல் பரிசுகளை வழங்கி அறிவியலுலகம்

வர்கள் ஆராய்ச்சிகளைப் பாராட்டியது. |9

அதன் பிறகு சிறிது காலத்திற்குள் ஈக்களின் ஜீன்கள் செயற் படும் முறைகளை ஏனைய பிராணிகளை ஆராய்வதிலும் கொண்டு

18. புதிர்க் கதிர்கள் - X-rays.