உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 14

ஐயமும் தெளிவும்

மெண்டல் 22 வகைப் பட்டாணிகளைக் கலப்பினச் சேர்க்கை செய்து ஆராய்ந்தார் என்று முன்னர்க் குறிபபிட்டோம். இந்த ஆராய்ச்சியில் அவர் எளிதாகக் கவனித்து அறியக்கூடிய ஏழு இணைச் சிறப்பியல்புகளைத் தேர்ந்தெடுத்தார். இவற்றுள் சில விளைந்த பட்டாணி விதைகளைப்பற்றியன; சில செடிகளின் உயரத் தைப் பற்றியன. சில அவை பூக்கும் பூக்களின் நிறத்தைப் பற்றியன. எடுத்துக்காட்டாகச் சிவப்புகிறப் பூக்களையும் வெண்ணிறப்பூக் களையும் தரும் பட்டாணி வகைகளைக் கலப்பினச் சேர்க்கை செய்ததில் ஏற்பட்ட விளைவுகளை முன்னர்க் காட்டினோம். அவை படத்தில் (படம்-28) காட்டப்பெற்றுள்ளன.

இங்கு முதல் தலைமுறையில் செந்நிறப்பூவையும் வெண்ணிறப் பூவையும் சேர்த்துக் கலப்பினம் செய்ததில் அவை முற்றிலும் செக்கிறப்பூக்களையே தந்தன. இரண்டாவது தலைமுறையில் இக் கலப்பினப்பூக்களை மகரந்தச் சேர்க்கை செய்ததில் அவை மூன்றாவது தலைமுறையில் செங்கிறப்பூக்களையும் வெண்ணிறப் பூக்களையும் முறையே 3 : 1 என்ற விகிதத்தில் தந்தன.

எலிகளை வைத்து ஆராய்ந்தவர்கள் காரெலிகளையும் வெள்ளை எலிகளையும் கலப்பினச் சேர்ககை புரிவதற்குத் தேர்ந்தெடுத்தனர். முதல் தலைமுறையில் இந்த இரண்டுவகை இனத்திற்கும் பிறந்த குட்டிகள் கருமை நிறமாகவே இருந்தன. இந்தக் குட்டிகள் பருவ

1 . இயல் 11.