உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வாழையடி வாழை

மடைந்து தமக்குள்ளே இனப்பெருக்கம் செய்தபொழுது நான்கு எலிகளில் மூன்று கருமை நிறமாகவும் ஒன்று வெண்மை நிறமாகவும்

இருந்தன. இதிலிருநது எந்த நான்கு எலிகளிலும் இவ்வாறு இருக் கும் என்று கருதவேண்டா. ஏராளமான எலிகளைக் கொண்டு இனப்

படம்-28. செந்நிற, வெண்ணிறப் பூக்களைத் தரும் பட்டாணிகளின் சேர்க்கையை விளக்குவது.

‘பெருக்கம் செய்யும்பொழுது அவற்றின் கருகிறவகையும் வெண்ணிற வகையும் 3:1 என்ற விகிதத்தில் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். இதனைப் படம் (படம்-29) விளக்குகின்றது.