உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயமும் தெளிவும் 93

மேற்கண்ட இரண்டு எடுத்துக்காட்டுக்களிலிருந்தும் நம் மிடையே ஓர் ஐயம் எழலாம். வெண்ணிற, செந்நிறப் பூக்களத் தரும் அந்திமந்தாரைகளைக் கலப்பினம் செய்ததில் வெண்சிவப்புப் பூவைத் தரும் அந்திமந்தாரை உண்டானதுபோலவே, செங்கிற வெண்ணிறப் பூக்களைத் தரும் பட்டாணி கலப்பினமாக்கினால்’ வெண்-சிவப்புகிறப் பூக்களைத் தரும் பட்டாணி வகையையும். வெள்ளெலியையும் காரெலியையும் கலப்பினமாக்கினால் கருமைக்கும்

s\ படம்-29. g63 - வெள்ளெலிகளின் கலப்பு இனத்தை விளக்குவது : P - பெற்றோர்; R - முதல் தலைமுறை; F, - இரண்டாம் தலைமுறை.

வெண்மைக்கும் இடையிலுள்ள எலிக் குட்டியையும் தரவேண்டு மல்லவா? முதலாவதில் செங்கிறப் பூக்களைத் தரும் பட்டாணியும் இரண்டாவதில் காரெலிக் குட்டியும் தோன்றுவதற்குக் காரணம் என்ன என்ற ஐயம் உண்டாகலாம்.

இந்த இடத்தில் நாம் ஒரு முக்கிய குறிப்பினை நினைவில் வைக்கவேண்டும். நிறத்திற்குக் காரணமான ஜீன்கள் ஒரே மாதிரி