உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பற்றிய பல ஆங்கில நூல்களையும் கற்பிப்பதற்கு இன்றி யமையாதனவாகவுள்ள கல்வி உளவியல்பற்றிய பல ஆங்கில நூல்களையும் ஆழ்ந்து கற்கவேண்டியிருந்தமையால் அதி லேயே காலமெல்லாம் கழிந்தது. ஏராளமான குறிப்புகளை எடுத்து வைத்திருந்தேன். இதனால் பயிற்சி மாணாக்கர் களைத் துணிவுடனும் உற்சாகத்துடனும் சந்திக்கும் வாய்ப்பு உண்டாயிற்று. 1957-58க்குள் தமிழ் பயிற்றும் முறை. அறி வியல் பயிற்றும் முறை, கவிதை பயிற்றும முறை. கல்வி உளவியல் என்ற நான்கு நூல்கள் உருவாயின. கற்பித்துக்கொண்டே நூல்களும் எழுதினதால் நூல்களில் தெளிவும் எளிமையும் கன்றாக அமைந்தன. இன்றும் அந்த நூல்கள் பெருமதிப் புடனும் புகழுடனும் புழக்கத்தில் இருந்துவருகின்றன.

1957 - 58 முதல்தான் அறிவியல் நூல்கள் பயில நேரம் கிடைத்தது. நான் வேதியியலை முதன்மைப் பாடமாக எடுத்துக்கொண்டு பி. எஸ்.சி. பயின்றவன். இருந்தபோதிலும் இயற்பியலில் பேரவாக் கொண்டிருந்தேன். இதில் அணு வியல் பகுதி என் உள்ளத்தை ஈர்த்தது. சென்னை அமெரிக்கன் நூலகத்திலிருந்து இத்துறையில் பல நூல்களைப் பெற்றுப் பயின்றேன். இதே சமயம் ஹெய்சன் பர்க் எழுதிய அணுக் கருவியல் (Nuclear Physics) என்ற நூலைத் தமிழாககம் செய்து சென்னைப் பல்கலைக் கழகப் பரிசையும் பெற்றேன். “Sg.) s Phi tid” (Peace su} Uses of Atom) st srm giflu நூலொன்றையும் வெளியிட்டேன். ‘கவிதையதுபவம்” என்ற நூலும் உருவாகிக்கொண்டிருந்தது. ஐ. ஏ. ரிச்சார்ட்ஸின் திறனாய்வு நூல்களிலிருநது சில நுண்ணிய கருத்துகள் இந் நூலில் ஏறின.

1960 ஆகஸ்டு திங்கள் முதல்நாள் காரைக்குடியிலுள்ள பேராசிரியர் பணியைத் துறந்து திருப்பதி திருவேங்கடவன்