பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi

பல்கலைக் கழகத்தில் திங்களொன்றுக்கு ரூ. 153 இழப்பில் தமிழ் விரிவுரையாளர் பணியை ஏற்றுக்கொண்டேன். புதிய பல்கலைக் கழகமாதலால் இடகெருக்கடி இருந்தது. புதிய துறை வளர்சசிகளுக்கேற்ப கட்டட வளர்ச்சி ஏற்பட முடிய வில்லை. வீட்டைக் கட்டிப்பார்’ என்ற பழமொழியைச் சும்மாவா சொல்லிவைத்தார்கள்? இதனால் ஓரேர் உழவன்’ போன்ற அடியேனுக்குப் பல இடங்களில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. விலங்கியல் துறையில் சிறிய தனிக் குழிப் பெருக்க அறையில் (Cubicle) சில ஆண்டுகள் தொடர்ந்து தங்கியிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த வாய்ப்பினை உயி ரியல் கற்கும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டேன். விலங் கியல் துறையில் பணியாற்றிய திரு. எஸ். ரெங்கராவ் (ஆந்திரர்). திரு. சீனிவாசலு (தமிழர்) எனக்கு அடிக்கடி நேரிடும் ஐயங்களை யெல்லாம் அகற்றினர்.”

கல்வி உளவியல் நூல்களைக் கற்கும்போது என் கவனம் குடிவழியின்பால் (Heredity) சென்றது. இப் பகுதியை ஆழ்ந்து கற்றேன். ஜீன்ஸ் (Genes) பற்றிய துறையில் தெளிவு ஏற்பட்டால் குடிவழிபற்றிய கருத்தில் விளக்கம் ஏற்படும் என்று அறிந்திருந்தேன். விலங்கியல் துறையில் தங்கியிருந்தபோது காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ எ ன் ற பழமொழியைக் கடைப்பிடித்து கால்வழியியல் (Genetics) துறையில் மிகவும் ஆழங்கால்பட்டு மேற் குறிப் பிட்ட இரண்டு அறிவியல் கண்பர்களின் துணை கொண்டு கல்ல விளக்கம் பெற்றேன். இந்தக் காலப் பகுதியில்தான்

2. இந்த இரு பேராசிரியர்களும் அற்ப ஆயுளில் இறைவனடி சேர்ந்தனர். இவர்களின் மறைவு தாங்கொணாத துக்கத்தை அளித்தது.