பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 வாழையடி வாழை

உண்மையில் ஜீன்கள் வாழ்நாள் முழுவதும் மூக்கின் நீளத்தையும் அகலத்தையும் அதிகரிப்பதில் செயற்பட்டுக்கொண்டே இருக் கின்றன. மேலும், ஒருவர் வாழ்வின் நடுப்பகுதியிலும் அதற்குப் பின்னரும்தான் மூக்கின் வளர்ச்சியில் திடீர் மாற்றத்தை (Spurt) காணலாம். இப்பொழுதுதான் மரபுவழிப் பண்புகள் முக்கில் தெளிவாகத் தட்டுப்படுகின்றன.

தனிப்பட்டோரின் பொது வளர்ச்சியும் மூக்கின் அமைப்பிற்குக் காரணமாகின்றது. சாதாரணமான நெட்டையானவர்களின் மூக்கு குட்டையானவர்களின் மூக்கைவிட நீளமான மூக்காக இருப்பதைப் பார்க்கின்றோம். பால் வேறுபாடுகளும் மூககின் பருமனுக்கு முக்கிய காரணமாகின்றன. ஆணிடமுள்ள ‘அண்ட்ரோஜெனிக்” சுரப்ஸ்ரீர்களின் காரணமாக அவர்களின் மூக்கு பெண்களின் மூக்கிணைவிடப் பெரிதாக அமைகினறது. மூக்கின் அமைப்பிற்கு வேறுபல சூழ்நிலைபற்றிய காரணங்களும் உள்ளன.

கண்கள் : கண்களின் அழகைப்பற்றி எல்லாநாட்டுப் புலவர் களும் பல்வேறுவிதமாக வருணித்துள்ளனர். கண்ணின் அமைப்பும் வடிவமும் தனிப்பட்டோரின கண்குழியையும் இமைகள் வளருவ தையும் பொறுத்துள்ளன. கண்குழியும் கண்ணுண்டையும் பெரியன வாக இருப்பதாலோ, அன்றி கண்ணுண்டை முன்பக்கமாகத் துருத்திககொண்டு கண் இமைகளைப் பினனுக்குத் தள்ளுவதனாலோ கண் பெரிதாக இருக்கலாம். கண் அமைப்புகள் படத்தில் (படம்-34) காட்டப்பெற்றுள்ளன :

சாதாரணமாக அகண்ட கண் அமைப்பிற்குக் காரணமான ஜின்கள் முதல் இணை குறுகலான கண்ணிற்குக் காரணமான ஜீன்களை அடக்கித் தாம் ஓங்கி நிற்கும். (ஒரேவித ஜீன்களைப் பெற் றிருப்பினும் ஆண்களினுடையவற்றைவிடப் பெண்களின் கண் ணுண்டைகள் சற்று நீளமாகவே இருக்கும். ஆண்களின் வலக் கண்ணுண்டை இடக்கண்ணுண்டையைவிடச் சற்றுப் பெரிதாகவும் இருக்கும்). நேராகவுள்ள கண்களுக்குக் காரணமான ஜீன்கள் (இரண்டாம் இணை) சாய்ந்த கண்ணுக்குக் (வாதுமைக்கண்) காரண மான ஜீன்களைப் பின்தங்கச்செய்து தாம் ஓங்கிகிற்கும். பெரும்