உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகத் தோற்றம் 1 13

பாலும் மகளிரிடம் நீண்ட கண்ணிமை மயிர்கள் ஓங்கி கிற்கும் ஜீன் களின் காரணமாகவே மரபுவழிப் பண்பாக அமைகின்றன. நீண்ட இமைமயிர்களைக்கொண்ட மகள் இரண்டு குழவிகட்கு ஒன்று வீதம் தன்னைப்போலவே நீண்ட இமைமயிர்களைக் கொண்ட பிள்ளையைப் பெறுவாள் என்பதை உறுதியாக எதிர்பார்க்கலாம்.

< <

படம்-34. கண் அமைப்புகள்.

s

காது: காதுகளின் அமைப்பைப்பற்றியும் பல சிறப்பியல்புகள் மரபு வழியாக இறங்கி வருவதைப்பற்றிக் கவனித்துள்ளனர். நீண்ட காது அமைப்பிற்குக் காரணமான ஜீன்கள். அகண்ட காது அமைப் பிற்குக் காரணமான ஜீன்கள், கிண்ண வடிவமான காது அமைப்பிற் குக் காரணமான ஜீன்கள் யாவும் ஓங்கி நிற்பவையாகும்.

வாய், பல் : ‘கொவ்வைச் செவ்வாய்’ ‘குமிழ் சிரிப்பு’ என்று புலவர்களால் வருணிக்கப்பெறும் வாயின் அமைப்பு மிகவும் சிக்க

வா.-8