உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 வாழையடி வாழை

யைச் (அமெரிக்கா) சார்ந்த மைல்ஸ் டர்டன்” என்பான் அவன் அதிகப் பருத்தவன் என்று சொல்ல முடியாது. ஏழரை அடி உயர முள்ள அவனது எடை 1000 இராத்தல். அவன் 1857இல் இறந்தான்.

குட்டையாக இருப்பினும் அல்லது கெட்டையாக இருப்பினும், ஒருவரது வடிவ அமைப்பிற்கு முக்கியமாக இருப்பது அவர் ஆனா அல்லது பெண்ணா என்பதே முக்கிய கூறாக அமைகின்றது என்று கண்டறிந்துள்ளனர். தனிப்பட்டவரின் பாலுக்கேற்றவாறு” இயற்கை அன்னை அவரது உடல் வடிவத்தை அமைக்கின்றாள். ஆணின் எலும்புக் கூடின் அமைப்பும் தசை அமைப்பும் முதலிலிருந்து இறுதி வரை பெரிதானவையாகவும் பழுவானவையாகவும் உள்ளன. பெண்ணிடம் கொங்கைகள், இடுப்புப் பகுதிகள், தொடைகள். கால்கள் முதலிய இடங்களில் உள்ள தசையமைப்புகளில் பெரிதும் வே று பாடு க ள் உள்ளன . அவ்விடங்களிலெல்லாம் அதிகக் கொழுப்புள்ள இழையங்கள் அமைகின்றன. இத்தகைய விவரமான சிறப்பியல்புகளில் ஜீன்கள் பங்கு பெறுவதுடன் அவை எடுப்பாகச் செயற்படும் தரத்தில் மரபுவழிக் கூறு செல்வாக்குப் பெறுகின்றது.

ஆண் பெண் எலும்புக் கூடுகளைப் பிரித்தறியும் எலும்பு வல்லுநர்கள் இவற்றைக் குறிப்புகளாகக் கொள்கின்றனர் : பெண் களின் இடுப்பமைப்பு ஆண்களின் இடுப்பமைப்பினைவிட அதிகமாக அகன்றும். அதிக ஆழமற்றும், அதிக வழுவழுப்பாகவும் அதிகமாக முன்பக்கமாகச சாய்ந்தும் இருக்கும். ஆண்களின் கைகால்களின் எலும்புகள் பெண்களின் கைகால்களின் எலும்புகளைவிட பெரியன வாகவும், தடித்தனவாகவும், பழுவானவாகவும் குமிழ்கள் பெரியன வாகவும் இருக்கும். ஆண்களின் மார்புக்கூடுகள் பெரியனவாகவும், புயங்கள் அகன்றனவாகவும் இருக்கும்; அவர்கள் கைகளும் பாதங் களும் அதிக நீளமானவையாகவும் கைவிரல் கால்விரல் எலும்புகள் பழுவானவையாகவும் மழுங்கலானவையாகவும் இருக்கும். மண்டை எலும்புகளிலோ பல்வேறு வேறுபாடுகள் காணபபெறும்.

5. Miles Darden.

6. urst - Sex.