உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடற் பருமனும் வடிவமும் | 2 |

அடியிற் காட்டப்பெற்றுள்ள படங்களை உற்று நோக்கினால் மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாட்டினைக் காணலாம். முழங் கையில் மேற்புயமும் கீழ்பபுயமும் சந்திக்கும் இடத்தில் பெண்ணிடம்

!

படம்-36. கை, கால்களில் பால் சிறப்பியல்புகளை காட்டுவன.

கோணம் காணப்பெறும்; ஆணிடம் கோணம் காணப்பெறாது. பெண்ணிடம் இரு தொடைகளும் இரு முழங்கால்களும் சந்திக்கும் இடத்தில் அநேகமாக இடைவெளிகள் இரா: ஆண்களிடம் இடை வெளிகள் இருப்பதைக் காணலாம். இருபாலாரும் நீராடும் உடை யணிந்துகொண்டு ஒரு பெரிய நிலைக்கண்ணாடியின் முன்கின்று இவ்வேற்றுமையைச் சோதித்து அறியலாம்.

மேற்கூறிய சிறப்பான பாலியற் பண்புகளை உன்னிப்பாகக் கவனிக்கும் நாம் இத்தகைய பண்புகட்குக் காரணமாகவுள்ள ஜீன்களை இருபாலாரும் கொண்டிருத்தல் கூடும் என்பதை நாம் நினைவி லிருத்த வேண்டும். ஆனால், இவ்விடத்தில் ஆண்கள், பாலியல் பற்றிய ஒரே ஒரு X-நிறக்கோல் ஜீன்களை மட்டிலுமே கொண்