உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 வாழையடி வாழை,

டுள்ளனர் என்பதும், பெண்கள் அவ்வித இரண்டு X-நிறக்கோல் ஜீன்களைப் பெற்றுள்ளனர் என்பதும் நினைவுகொள்ளத்தக்கவை. அ.தாவது. ஒரு குறிப்பிட்ட வகையில் பெண்களின் கொங்கைகள், இடுப்புகள். அல்லது வேறு பாலியற் பண்புகள் அமைவது தாய் வழியாக இறங்குவதைப் போலவே தந்தைவழியாகவும் எளிதாக இறங்குதல்கூடும்; அங்ஙனமே சிறப்பான ஆணியற்பண்பு தாய் வழியாகவும் தந்தைவழியாகவும் கடத்தப்பெறுதல் கூடும். எனவே, பெரும்பான்மையானவர்களிடம்,சிறப்பாகத் தந்தையிடமுள்ள ஜீன்கள் ஓங்கி கிற்கும் பண்புகளைப் பெற்றிருப்பின், ஒரு பெண் குழவியின் வடிவம் அவளது தாய்வழிப் பெண் உறவினர்களைப்போல் அமை வதைவிட தந்தைவழிப் பெண் உறவினர்களைப்போலவே அமையும் என்றும், அங்ஙனமே ஒர் ஆண்குழவியின் உடல் அமைப்பு அவனது தந்தைவழிப பாட்டன் அல்லது தந்தையின் சகோதரன் ஆகியவர் களைப்போல் அமைவதைவிட அவனது தாய்வழிப் பாட்டன் அல்லது தாயின் உடன் பிறந்தோன் ஆகியவர்களைப்போல் அமையும் என்பதை அறிகின்றோம். இவற்றையெல்லாம் கால்நடைப் பண்ணை அல்லது கோழிப் பண்ணையை வைத்துப் பராமரிப்போர் நன்கு அறிவர்.

ஆண் பெண்களின் உட்சூழ் நிலைகளினிடையே காணப் பெறும் வேறுபாடே.-சிறப்பாக கால்வழியியலடிப்படையிலமைந்த சுரபபியற்றிய வேறுபாடுகள்-பாலியல் சிறப்பியல்புகளை விளை விக்கும் அதே ஜீன்களிடையே முரண்பாடான விளைவுகள் ஏற்படக் காரணமாகின்றது இவ்விடத்தில் இன்னொரு குறிப்பையும் நினைவிலிருத்த வேண்டும். அஃதாவது, இருபாலாரிடையேயும் தனிப்பட்டோரின் பாற்சுரப்பிகள்’ செயற்படுவதற்கேற்றவாறு உடல் தோற்ற ஆண்மைப் பண்பு அல்லது பெண்மைய பண்புகள் அல்லது வேறு ஒரு குறிப்பிட்ட பாலியற் பண்பின் தரம் அமைகின்றது. தனிப்பட்ட ஆண் அல்லது பெண்ணின் பாலிற்குரிய ஹார்மோன் சமனிலை குலையக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டால்-சிறபபாக இ.து பூப்பு நிகழ்வதற்குமுன் ஏற்பட்டால்-ஆண் உருவத்தில் மகளிர்க குரிய தோற்றமும், பெண் உருவத்தில் ஆடவர்க்குரிய தோற்றமும்

7. L1r f&rg LMssir - Sex glands.