பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடற் பருமனும் வடிவமும் 1 2 3

நேரிடுதல்கூடும்; இந்த இரண்டுபேரும் அலிநிலையில் இருக்கவும் நேரிடலாம். ஹார்மோன் சமனிலையில் குறைவான மாறுபாடுகள் ஏற்படின் மகளிரிடம் கொங்கைப் பெருக்கம் அல்லது இடுப்புப் பெருக்கத்தில் வளர்ச்சிக் குறைவையும் ஆடவரிடம் இப்பகுதிகள் அதிக வளர்ச்சியினையும் விளைவித்தல்கூடும்

உச்சி முதல் உள்ளங்கால்வரை: எல்லா இனத்தாரிடையேயும் தலையின் பல்வேறு அ மை ப்பு கள் காணபபெறுகின்றன. இவற்றின் முக்கிய கூறுகள் யாவும் ஜீன்களாலேயே அறுதியிடப் பெறுகின்றன. பொதுவாக நாம் மக்களை உருண்டைத்தலையர்’ (Round-headed) ‘sar gsosouff’ (Long-headed) GT sin Gp இனங் காண்கின்றோம். தலையமைப்பில் சில ஜீன்கள் உருண்டை அமைப்பதிலும், சில நீளமாக அமைப்பதிலும், சில பருமன் அமைப்பதிலும் இன்னும் சில பிரத்தியேகமான அமைப்பிலும் பங்கு பெறுகின்றன. இதில் பல்வேறு கூறுகள் சிக்கலான முறையில் பங்குபெறுவதால், குழவிகளின் தலைகள் எங்ஙனம் அமைதல்கூடும் என்பதை முன்னதாகவே அறுதியிட்டுக் கூறுவதென்பது இயலாத தொன்று. ஆனால், வட்டத்தலை அமைவதற்குரிய ஜீன்கள் நீண்டத்தலை அமைவதற்குரிய ஜீன்களை அடக்கச்செய்து தாம் ஓங்கி நிற்கின்றன என்று அறியப்பெற்றுள்ளது. தலையமைப்புகள் படத்தில் (படம்-37) காட்டபபெற்றுள்ளன.

வரபுவழியாகப் பெறும் தலையமைப்புக் கூறுகளின் போக்குகள் பிறப்பிலிருந்தே வலியுறுத்தி நிற்பதைக் காண்கின்றோம். ஆண் குழவிகளின் தலையமைப்பு பெண்குழவிகளின் தலையமைப்பைக் காட்டிலும் தொடக்கத்தில் உருண்டையாக அமைந்து இறுதியில் சற்று நீளமாகிவிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்ப தற்கு முன்னர் அமையும் சில கூறுகள், அதன்பின்னர் உணவு முறை, உண்ணும் பழக்கங்கள், தூங்கும் பழக்கங்கள் பேச்சுப் பழக்கங்கள் ஆகியவை தலையமைவதற்குக் காரணமாகின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இடுப்புகள், மார்பு, தொடைகள், கால்கள், கைகள், கை விரல்கள், கால் விரல்கள், தசையமைப்பு முதலிய உச்சி முதல் உள்ளங்கால் வரையிலுமுள்ள உறுப்புகளின் அளவுகளும் வடிவங்