பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 24 வாழையடி வாழை

களும் குடிவழியால் அறுதியிடப்பெறுகின்றன. க வர் ச் சி க் கூறினை முக்கியமாகக் கொண்டால் இவற்றிற்குச் சமூக மதிப்பு உண்டு; செயல் முறையை முக்கியமாகக் கொண்டால் இவற்றிற்கு நடைமுறை முக்கியத்துவம் உண்டு.

படம்-87. தலையமைப்புகள்.

வாழ்க்கைப் பழக்க வழக்கங்களும் தொழில் முறைகளும் சிலரிடம் சில உறுப்புகளின் சிறிது வேற்றுமைக்குக் காரணமா கின்றன. ஒரு கருமானின் மகனுக்கு தசைநார் உறுதியாகவுடைய புயங்கள் அமைந்திருந்தால், அது மரபு வழியால் அமைந்தது என்று அறுதியிடுவது தவறு அச் சிறுவன் பட்டறையில் வேலை செய் வதனாலும் அவனிடம் அத்தசை அமைவதற்கு வாய்ப்புண்டு. இங்ஙனமே தையற்காரர்கள், ஊர்க்காவலர்கள், உழவர்கள் போன்ற குடும்பங்களில் காணப்பெறும் சில சிறப்பியல்புகள் அமைவதற்குச சூழ்நிலையும் மரபுவழியும் இணைந்து செயற்படுவதைக் காரணமாகக் கொள்ளலே ஏற்புடைத்தாகும்.