உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கம்

இதுகாறும் வெளித் தோற்றத்தை விளைவிக்கும் கூறுகளை மாத்திரமே ஆராய்ந்தோம். மனிதன் உள்ளே ஒன்றும் இல்லாத வெறும் பிளாஸ்டிக் பொம்மை அல்லன் கண்கள், காதுகள், கிறம், வடிவம் முதலிய கூறுகள் பொம்மையினை அறுதியிடப்போது மானவை. மனிதனுக்கு இவை போதுமானவையன்று. அவனுக்கு அல்லது அவளுக்கு முகவெட்டு மிக முக்கியமானதாக இருப் பினும், ஒரு தனியாளுக்கு மிக முக்கியமானது அந்த ஆளின் உள்ளமைப்பேயாகும். மூளை, நரம்புகள், இதயம், நுரையீரல்கள், சுரப்பிகள். ஏனைய செயற்படும் பகுதிகள் யாவும் தனியாளை அறுதியிட மிகவும் முக்கியமானவை. இவைதாம் மனிதருக்கு மனிதர் பெரிய வேறுபாடுகளை விளைவிப்பவை. இவையே இயக்கத்திற்கும் காரணமானவை.

நம்மிடமுள்ள இந்த உள்ஸ்ரீப்புகளைத் தக்க முறையில் அமைப்பதில் ஜீன்கள் இடைவிடமால் செயலாற்றிக் கொண்டே யுள்ளன. தனிப்பட்ட மனிதர்களிடம் இந்த உறுப்புகளிடையே காணப்பெறும் வேறுபாடுகள் யாவும் பெரும்பாலும் மரபு வழியே இறங்குகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் இவற்றைத் தனித்தனியாகப் பிரித்து இனங் காண்பதென்பது குதிரைக் கொம்பு. இவை முகக் குறிகளையோ பிற வெளித் தோற்றக் கூறுகளையோ அறுதியிடுவதுபோல் அவ்வளவு எளிதன்று இவை மிகமிகச் சிக்கலான முறையில் செயற்படுகின்றன. இங்கு நாம் எளிதாகக் காணக்கூடிய சிறப்பியல்புகளை மட்டிலும் கூறுவதுடன் இல்லை : இவை செயற்படும் முறைகளையும் இவை உண்டாக்கும் விளைவுகளை