பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கம் 129

இங்கு இளமையிலேயே இறப்பு நிகழ்வதற்குக் காரணம் குடிவழியா? அல்லது சூழ்நிலையா? இதன் காரணம் வெளிப்படை. அங்ஙனமே ஒருசில பின்தங்கி நிற்கும் ஜீன்களின் காரணமாக எண்ணற்ற குழவிகள் மூன்றாண்டுகள் நிறைவெய்து முன்னரே மரித்து விடுகின்றன. இங்ஙனம் நிகழ்வதற்குச் சூழ்நிலை காரணமா? அல்லது குடிவழியா? இதற்கும் விடை வெளிப்படை.

முகம் கோணலாக அமைதல், உடலமைப்பில் திரிபு ஏற்படுதல், சபபாணியாதற்குரிய நிலைகள், கண்ணிழப்பு போன்ற சிலரிடம் காணப்பெறும் உடற்குறைகள் யாவற்றிற்கும் தற்செயலாக நேரிடும் விபத்துக்களும் அல்லது சூழ்நிலைக் கோளாறுகளும் காரணமாகும். வேறுபல குறைகள் மரபுவழியாக ஏற்படுவனவேயாகும். இங்ஙனம் தெளிவாகவுள்ள எடுத்துக்காட்டுகளில் மரபுவழி காரணமா அல்லது சூழ்நிலை காரணமா என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம்; கூறுவதும் பொருத்தமாகும்.

ஆயினும், சில சிறப்பான மரபுவழிக் கூறுகளும் சில சிறப்பான சூழ்நிலைகளும் இணைந்து இயற்றுவதன் விளைவாக நேரிடும் சாதகமான நிலைமைகளும் பாதகமான நிலைமைகளும் உள்ளன. இன்னும், பல பண்புக் கூறுகளின் கலவையும் சந்தர்ப்பங் களும்-ஒருவரின் வாழ்வு முழுவதையும் ஒரு கூறாகக்கொண்டு ஆராயும்பொழுது மரபுவழியும் சூழ்நிலையும்-சதா இணைந்து செயற் படுவதையும் நாம் காண்கின்றோம். இங்கு நாம் மீனையும் நீரையும் பிரிக்க முடியாததைப போலவே உடற்கூற்றின் பொறி நுட்பத்தைச் சூழ்நிலையினின்று தனியாகப் பிரித்துவைத்து ஆராய முடியாது.

எனவே. தனிப்பட்டவர்களின் இயக்கத்தையும் அவர்கள் ஏன் பல்வேறுவிதமாக இயங்குகின்றனர் என்பதையும் அறியவேண்டு மாயின், முதலில் ஒருசமயம் ஒரு பண்புக்கூற்றில் அல்லது செயலில் நமது முழுக் கவனத்தையும் செலுத்தவேண்டும். இதுவே மெண்டல் என்ற மூதறிஞர் மேற்கொண்டமுறை. இரண்டவதாக இந்தப் பண்புக்கூறு அல்லது செயலுக்கு அவர்கள் முற்றிலும் ஒரே மரபு வழியைப் பெற்றுள்ளனரா என்பதைக் கவனித்தல்வேண்டும். இங்ஙனம் அவர்கள் பெற்றிருப்பின், அவர்களிடம் காணப்பெறும்

வா.-9