உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 19

இரட்டைப் பிறவிகள்

கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உயிரணுக்களிலிருந்து மானிட உயிா தோன்றுவதும் பல்வேறு சிக்கலான அமைப்புகளையும் பண்புகளையும் கொண்ட ஒரு மனிதன் உருப்பெறுவதும் வியப்பே யாகும். அதே சிறிய உயிரணுக்களிலிருந்தே இரண்டு. மூன்று. நான்கு என்று சிலசமயம் ஒரேமாதிரியான பல குழவிகள் தோன்று வதைக் காணும்பொழுது நம்முடைய வியப்பு பன்மடங்கு அதிகரிக் கின்றது. இயற்கையின் இரகசியம் புரிந்துகொள்ளமுடியாத புதிராக இருப்பதைக் கண்டு இறும்பூது அடைகின்றோம். ஈண்டு இரட்டைப் பிறவிகள் தோன்றுவதைமட்டிலும் விளக்குவோம். இரட்டைப் பிறவிகள் இருவிதங்களில் உண்டாகலாம். இந்த இருவகைப் பிறவிகள் உண்டாவது (படத்தில்-38 A & B) காட்டப் பெற்றுள்ளது. உற்றுநோக்கித் தெளிவுபெறுக.

ஒருகரு இரட்டையர் : இவ்வகையில் கருவுற்ற ஒரே முட்டை யிலிருந்து இரண்டு குழந்தைகள உண்டாகின்றன. கருவுற்ற முட்டை பிரிவுபட்டு உண்டான கருப்பததில் உள்ள உயிரணுக்களின் தொகுதி இரண்டு பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குழந்தையாக வளரும். ஏன் அது இவ்வாறு பிரிகின்றது என்பது இயற்கையன்னையின் பல புதிாகளில் ஒன்றாகும். வளர்ச்சியின் முதல் நிலையில் எல்லா உயிரணுக்களுக்கும் குழந்தையின் எல்லாப் பகுதிகளாக வளரும் ஆற்றல் உண்டு. இவ்வாறு பிறக்கும் குழவிகளின் தோற் ற ம், தன்மை, உயரம், நிறம், உறுப்புகளின் அமைப்பு முதலிய மரபுவழிக்

1. ஒருகரு இரட்டையர் - Identical twins.