உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டைப் பிறவிகள் 1 35

கிறக்கோல்களும் ஒரேமாதிரியாக அமையும் என்று சொல்வதற் கில்லை. ஒரு முட்டையில் தாய்வழிப் பாட்டனிடமுள்ள கிறக் கோல்கள் அதிகமாகவும், மற்றொன்றில் தாய்வழிப் பாட்டியிடமுள்ள கிறக்கோல்கள் அதிகமாகவும் அமையலாம். மேலும், இந்த இரண்டு முட்டைகளும் வெவ்வேறு முறையில் அமைந்த நிறக்கோல் களைக் கொண்ட இரண்டு தனிப்பட்ட விந்தணுக்களால் கருவுறு கின்றன. இதனால்தான் இவை பலபண்புக் கூறுகளில் வேற்றுமை யுடன் அமைகின்றன. இதனால்தான் கிறம், உரோமவளர்ச்சி, உயரம், உறுப்புகளின் அமைப்பு, தோற்றம் முதலானவற்றில் சாதாரணமாக சகோதர சகோதரிகளிடம் காணப்பெறுவதைப் போலவே இவையும் வேறுபாடுகளுடன் அமைகின்றன. இததகைய இரட்டைப் பிறவிகள் சகோதர இரட்டைகள் எனவும் வழங்கப்பெறும். படம் (படம்-38B) இவை உண்டாவதை விளக்குகின்றது.

இயல்பிகந்த இரட்டையர் : கருவுற்ற முட்டையிலுள்ள உயி ரணுக்களின் தொகுதி இரண்டு பகுதிகளாகப் பிரியும்பொழுது முற்றிலும் இரண்டாகப் பிரியாமல் போகுமாயின் இயல்பிகந்த இரட்டைகள் பிறப்பதற்கு ஏதுவாகும். இவை வெவ்வேறு நிலை களில் ஒட்டிய பாங்கில் பிறக்கும். இவற்றை ஒட்டுப் பிறவிகள்” என்று வழங்குவர். முதன்முதலில் இத்தகைய பிறவிகளில் ஒன்று உயிருடன் சயாம்நாட்டிலிருந்து வந்ததைக் கண்டதால் இவ்வகைப் பிறவிகளை சயாம் இரட்டையர்” என்று வழங்குகின்றனர். சாதாரண மாக ஒட்டுப்பிறவிகள் உடலில் ஒருபகுதி (எ-டு. இடுப்பு), தலை, பக்கங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஓரிடத்தில் ஒட்டிக்கொண் டிருக்கும். படத்தில் (படம்-39) இருவகை ஒட்டுப்பிறவிகள் காட்டப்பெற்றுள்ளன. பெரும்பாலும் சயாம் இரட்டையர் அச்சு இரட்டையராகவே இருப்பர். ஆனால், ஒருசிலர் சகோதர இட்டை யரின் இளஞ்சூல்கள் தொடக்க நிலையில் ஒன்றையொன்று நெருங்கி அழுத்திய நிலையில் அமைந்தால் இவ்வாறு ஒட்டுப்பிறவிகளாக அமைந்துவிடும் என்று நம்புகின்றனர். இன்னும் சிலர் ஒரு முட்டை இரண்டு விந்தணுக்களால் கருவுற்றால் இத்தகைய பிறவிகள்

5. 6'1"-Gil 15 possir - Conjoined twins. 8. சயாம் இரட்டையர் - Siamese twins.