உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 வாழையடி வாழை

அமையலாம் என்றும் கூறுகின்றனர். இந்த இரண்டு கொள்கை . கட்கும் யாதொரு சான்றும் இலலை.

படம்-39. ஒட்டுப் பிறவிகளைக் காட்டுவது.

இளஞ்சூல் நிலையில் பிரிவது முற்றிலும் சரியாகப் பிரியா விட்டால் சில சமயம் ஒரு தலை நான்கு புயங்கள் நான்கு கால்களை யுடையதாகவும், அல்லது இரண்டு தலைகளையுடையதாகவும். அல்லது அக உறுப்புகளிலுளோ புற உறுப்புகளிலோ பல்வேறு விதமாக இரட்டித்தும் அரக்கபபிறவிகள் தோன்றுவதுண்டு. பெரும் பாலும் இத்தகைய பிறவிகள் பிறப்பதற்கு முன்பதாகவே மரித்து விடும். ஆனால் 1937 இல் இர ஷ்யாவில் இரண்டு தலைகள், ஒருடல், நான்கு புயங்கள், இரண்டு கால்கள். ஒருசிறிய வால் இவற்றுடன் பிறந்த ஒரு குழந்தை ஓராண்டுவரை வாழ்ந்து உயிர் துறந்ததாக அறிகின்றோம்.

இரட்டைப் பிறவிகள் ஏற்படுவது ஒரு மரபுவழிப் பண்பு என்று அறியக்கிடக்கின்றது. சில குடும்பங்களில் இப் பண்பு அடிக்கடி தலைகாட்டுவதாக ஆராய்ச்சிகளால் அறிகின்றோம். ஒரே தாயிடம் தொடர்ந்தாற்போல் பல பிறவிகளையுடைய குழந்தைப்