பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டைப் பிறவிகள் 1.37

பேறு ஏற்படக் காண்கின்றோம். ஓர் ஆஸ்திரியப் பெண்மணி 69 குழவிகட்குத் தாயான செய்தியை அறிகின்றோம். அவள் நான்கு தடவைகள் நந்நான்கு குழந்தைகளையும். ஏழு தடவைகள் மும்மூன்று குழவிகளையும், பதினாறு தடவைகள இரட்டைக் குழவிகளையும் பெற்றெடுத்ததாக அறியக்கிடக்கின்றது. ஆயினும், பெண்ணின் செல்வாக்கு மட்டிலும் இப் பிறவிகளில் ஒரு முக்கிய கூறாக அமையவில்லை என்றும், ஆண்வழியாகவும் இக்கூறு அமைந்துள்ளதற்குச் சான்றுகள் உள்ளன என்றும் அறிகின்றோம். இரண்டுமுறை மணம் புரிந்துகொண்ட ஒரு மனிதனுக்கு முறையே இரட்டைப் பிறவிகளும், மூன்று குழவிப் பிறவிகளும் அதிகமாக ஏற்பட்டதாகச் சான்று கிடைக்கின்றது.

கம் நாட்டுப் புராணக் குசேலருக்கு இருபத்தேழு குழவிகள் இருந்தன என்பதை நாம் அறிவோம். அக் குழவிகள் கஞ்சிக்காகப் படும்பாட்டை,

ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு

கைநீட்டும்; உந்திமேல் வீழ்ந்து இருமகவுங் கைநீட்டும்; மும்மகவுங் கைநீட்டும் என்செய் வாளால்; பொருமியொரு மகவழுங்;கண் பிசைந்தழும்மற்

றொருமகவு; புரண்டு வீழாப் பெருநிலத்திற் கிடந்தழுமற் றொருமகவெங் நனஞ்சகிப்பாள் பெரிதும் பாவம். அந்தோவென் வயிற்றெழுந்த பசியடங்கிற் றில்லையென அழுமால் ஓர்சேய்; சிந்தாத கஞ்சிவார்க் கிலையெனக்கன்

னசயெனப்பொய் செப்பும் ஓர்சேய்; முந்தார்வத் தொருசேய்மி சையப்புகும்போ

தினிலோர்சேய் முடுகி யீர்ப்ப நந்தாமற் றச்சேயும் எதிரீர்ப்பச்

சிந்துதற்கு நயக்கும் ஓர்சேய்.”

7. குசேலோபாக்கியானம் : குசேலர் மேல்கடலையடைந்ததுof uit : 7O -71.