பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வாழையடி வாழை

என்று கவிஞர் வருணித்திடுவர். இதனால் குழவிகளில் பலர் மிகச் சிறு வயதினராயிருந்தனர் என்று ஊகஞ்செய்யலாம். ஆகவே, சுசீலைக்குப் பல குழவிகளையுடைய பல குழந்தைப் பேறுகள் ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்று கொள்வது தவறுடைய தாகாது. இப்படிக் கொண்டால்தான் கவிஞருடைய கற்பனை பொருந்துவதாக அமையும். அந்தக் கற்பனைக்கும் அறிவியல் அடிப்படையில் நல்ல விளக்கமும் ஏற்பட ஏதுவாகும்.

இரட்டைப் பிறவிகள்பற்றிய செய்திகளை எல்லாம் இங்கு

கூறுவதற்கு இடம் இல்லை அவற்றை அறிஞர் நூல்களில் கண்டு கொள்க.*

8. Amram Schoinfeld; The New You and Heredity - Chap. 18.