உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii

குழந்தைக்குப் புட்டிப் பால் குப்பியைத் தருவது போன்று ரூ. 4700/- கிதி வழங்கியது. இதுபோல் இன்னொரு மடங்குக்கு மேல் சேர்ந்து சற்றேறக்குறைய ரூ. 12,000/-இல் இந் நூல் தமிழுலகில் தவழ்கின்றது. தமிழுலகம் இந்த அறிவியல் குழந்தையை வாரியணைத்து முத்தமிடுவதுபோல் கொஞ்சிக் குலவிப் படித்து மகிழ்ந்தால் அஃது இந்த நூலின் பேறு. இக் குழந்தையின் தாயாகிய அடியேனும்,

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” என்று வள்ளுவர் காட்டும் தாயின் நிலையை அடைந்து மகிழ் வேன். குழந்தை தவழும் அளவுக்கு நிதியுதவி வழங்கிய தமிழக அரசுக்குத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் வழியாக என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நூலைச் செவ்வியமுறையில் அச்சிட்டுதவிய அப்பர் அச்சகத்தினருக்கும், சிறப்பாக அதன் மேலாளர் திரு. ஜி. சுப்பையா அவர்கட்கும், அழகிய முறையில் அட்டை ஓவியம் வரைதல், அச்சுக்கட்டை தயாரித்து மூவண்ணத்தில் அட்டை யில் அச்சிடல், லாமினேஷன் (Lamination) போடுதல் வரை பொறுப்பேற்று உதவிய ஓவியமன்னர் திரு. பி. என். ஆனந்தன் அவர்கட்கும், சீரிய முறையில் கட்டமைத்துத் தந்த கந்தன் அடிமை திரு. எஸ். பி. சண்முகம் பிள்ளை (உரிமையாளர், Ganesh Printing and Binding) goirst 6th STsir 2-strib கிரம்பிய நன்றியறிதலைப் புலப்படுத்திக்கொள்ளுகின்றேன்.

இந்த நூலினை மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. செ. அரங்கநாயகம் அவர்களின் அணிந்துரை மகுடம்போல் வனப்பூட்டுகின்றது. இவர் ஆட்சி பீடம் ஏறியது முதல்

4: குறள் - 69.