பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv

இ ன் று வ ை கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டது தமிழகத்தின் பெரும் பேறாகும். இத் துறைப் பொறுப்பிலிருக்குங்கால் தமிழகத்திற்கும் தமிழ்மக்களுக்கும் தமிழ்மொழிக்கும் பல அரிய பெரிய பணிகளைப் புரிந்து வருவதைக் குன்றின் மேலிட்ட விளக்குபோல் அனைவரும் கன்கு அறிவர்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்ற வள்ளுவர் வாக்கினை நன்குணர்ந்த புரட்சித் தலைவர் மாண்புமிகு முதல்வர் திரு. எம். ஜி இராமச்சந்திரன் இக் கல்வி யாளரைத் தேர்ந்தெடுத்துக் கல்வித்துறைப் பொறுப்பை வழங்கின மைக்குத் தமிழகம் நன்றி செலுத்தவேண்டும். கல்வி அமைச்சர் தம் காலத்தில் புரிந்த நற்பணிகளைப் பட்டியலிட்டுக் காட்ட இங்கு இடமில்லையெனினும், வரலாறுகாண முடியாத வண்ணம் ஐந்தாவது உலகத் தமிழ்மாநாட்டைச் சிறப்புற கடத்திய பெருமை, இந்தியாவிலேயே-ஏன் உலகிலேயேஒரு மொழிக்குத் தனிப் பல்கலைக் கழகம் கண்டமை. இரண்டு தமிழ்க் கவிஞர் பெயரில் இரட்டைக் காப்பியம்போல் இரண்டு பல்கலைக் கழகம் ஏக காலத்தில் கண்டமை,

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி

பேணி வளர்த்திடும் ஈசன்

பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம்

பேதமை யற்றிடும் காணt” என்று கவியரசர் போற்றும் பெண்களின் கல்வி வளர்ச்சிக் காகப் பெண்களுக்காகவே ஒரு தனிப் பல்கலைக் கழகம்

5. குறள் - 517. .ே ப. பா. முரசு - 9, 10.