உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீய ஜீன்கள் 1 5 I

கடத்தப்பெறாது. ஆனால் அவரிடம் மரபுவழியாக வந்கதாக இருப்பின், அவர் (ஆண் அல்லது பெண்) அந்நோய்க்குரிய சிகிச்சை பெற்று அந்நோய் நீங்கினும் அல்லது நீங்காவிடினும். அவர் எவ்வளவு உடல்நலததுடன் இருந்தபோதிலும், அவரிடமிருந்து “தீய ஜீன்’ கடத்தப்பெற்று அவருடைய குழவிகட்கும் அவரிடமுள்ள குறை ஏற்படுதல் சாத்தியப்படக்கூடும். ஆகவே, நவீன சிகிசசை யாலும் காப்புமுறையாலும் ஒருசில தலைமுறைகளில பிறவிசார்ந்த வழியில் அல்லது வேறு வழியில் உண்டாகும் மேகநோய் அல்லது அதுபோன்ற சில நோய்களை இப் பூவுலகில் இல்லாமலேயே செய்து விடலாம். ஆனால் மரபுவழியாக வரும் நிலையை அங்ஙனம் அகற்றுதல் இயலாது. அந்த நிலைக்குக் காரணமாகவுள்ள தீய ஜீன்களைக் கொண்டுள்ளவர்கள்மூலம் பிள்ளைப் பேறு இல்லாது செய்தால் இநகிலை பரவாது தடுத்தல் கூடும். ஆனால், இது கடைமுறையில் இயலாததொன்று என்பது வெளிப்படை!

குடும்பக் கூறாக உள்ள நிலைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று: கால்வழியியல் சார்ந்தவை. இவை அடுததடுத்த தலைமுறை களில் அதே வகை ஜீன்கள் கடத்தப்பெறுவதால் நேரிடுபவை. இரண்டு:முறறிலுங் சூழ்நிலையால் ஏற்படுபவை: அதே கெட்ட நிலைகள் அல்லது தீமைபயக்கும் செல்வாக்குக் கூறுகள் தொடர்ந்து நிலவு வதால் ஏற்படுபவை. இந்த இரண்டு வகை நிலைகளையும் வேறு படுத்தி அறிதல் மிகவும் முக்கியமானது. பல தொற்றுநோய்கள், பல உடறகுறைகள், சிலவகை இயல்பிகந்த உளக்கோளாறுகள், இயல்பிகந்த நடததைகள்-ஆகியவை யாவும் இரண்டாவது வகை யைச சார்ந்தவை. ஒரு காலத்தில் இவை யாவும் மரபுவழியாக வருதவை என்றே கருதப்பெற்றன. மேலும், உணவிலுள்ள ஊட்டக் குறைகள் விட்டமின குறைகள் இவற்றிற்குக் காரணம் என்பதையும் காம் அறிவோம்; குடிநீரில சில வேதியியற் பொருள்கள் இருபபதன் காரணமாகவும் இல்லாமை காரணமாகவும் சில பற்குறைகளையும் இயல்பிகந்த சுரப்பிக் கோளாறுகளையும் விளைவிக்கின்றன

7. கால்வழியியல் சார்ந்த - Genetic.