உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வாழையடி வாழை,

(ii) சிலர் உடல் வேதியியலின் சில தனிப்பண்புகளை (ஹார்மோன்கள்பற்றியவை அல்லது வேறு கூறுகளைப்பற்றியவை) மரபுவழியாகப் பெறலாம். இவை சில உயிரணுக்களில் எரிசசலை விளைவித்துப் புற்றுநோய் ஏற்படக் காரணமாகலாம்.

(iii) சில குறையுள்ள ஜீன்களால் உடல் அமைப்பிலேயே தவறுகள் ஏற்பட்டு உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் புற்றுநோய் அணுக்கள் ஏற்படலாம், எ-டு. இளமையில் ஏற்படும் சில அரிய புற்றுநோய் வகைகள்.

(iv) உயிரணுக்கள் சில நுண் புழுக்கள் (Virus) அல்லது வேறு புறக் கூறுகளால் புற்றுநோய் உண்டாகும் நிலையினைப் பெறலாம்.

பெண்களைவிட ஆண்களே இந் நோய்க்கு அதிகமாக இரையா கின்றனர். நவீன மருந்து முறைகளினால் மக்களின் வாழ்நாள் பெருகுகின்றது. இதன் காரணமாகப் புற்றுநோயால் மரிப்போரின் எண்ணிக்கையும் பெருகுகின்றது. ஏன்? ஆயினும், புற்றுநோயைக் கண்டறிதல், தடுத்தல், கட்டுப்படுத்தல், சிகிச்சை முறைகள் இவற்றால் இன்று புற்றுநோயால் இறப்போரின் தொகை குறைக்கப் பட்டு வருகின்றது.

(3) நீரிழிவு நோய்: இந் நோய் மரபுவழியாக இறங்கும் நிலை யினால் வருவது. வயது ஆக ஆகப் பொருந்தா உணவுகளும், பிற கூறுகளும் இக் கோயினை மிகுதிபபடுத்திவிடுகின்றது. இந்தச் சருக்கரை நோய்’ கணையம் உடலுக்குத் தேவையான அளவு இனசுலின்’ என்ற நீரைச் சுரக்காததால் ஏற்படுகின்றது. இந்த நீர்தான் உடற்செயல்களில் சருக்கரையை மாற்றம் அடையச செய்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இந்நீர்க் குறைவின் காரண மாகக் குருதியில் அதிகச் சருக்கரை தேங்கிச் சிறுநீரகங்கள் நாளடைவில் சீர்கேடுறுகின்றன; இறப்பில் கொண்டு செலுத்தும் நஞ்சு

1 1. &rojssons (35Tu'i - Sugar sickness. 12. 3560600ruith - Pancreas.