உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிய நோய்கள் f 63

களையும் உண்டாக்குகின்றன. பெரும்பாலும் தாய்வழியாக வரும் ஒரு ஜீனும் தந்தைவழியாக வரும் ஒரு ஜீனும் சேர்ந்து மரபுவழியாக இந்நோய் வரும் நிலையை உண்டாக்குவதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேறுசிலர் இந்த ஜீன்களால் மட்டிலும் நோய் ஏற்படுவதாகச் சொல்ல முடியாதென்றும், சிலரிடம் நடுவயதில் அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் அவர் சிலவகைக் கொழுப்பு அதிகமான உணவு கொள்ளுவதாலும், மிதமிஞ்சி உண்ணுவதாலும், உடல் பருப்பதாலும், அதிக கவலையாலும், சிலவகை நோய்களால் தாக்கப்பெறுவதாலும் இந் நோய் ஏற்படுகின்றதென்றும் கூறு கின்றனர். ஆண்களைவிடப் பெண்களையே இந்நோய் அதிகமாகத் தாக்குகின்றது. சில பெற்றோர்களிடம் இருநோயே இல்லாதிருந்து குழந்தைகளிடம் காணப்பெறுவதற்கு அவர்களிடமுள்ள பின்தங்கி நிற்கும் ஜீன்களே காரணம் என்று கூறுகின்றனர். புற்றுநோய், இதயநோய்களைப் போலவே மரபுவழியாக வரும் அச்சுறுததல் களைப்பற்றி முன்னரே அறிந்துகொண்டால் இதனைத் தொடக்கத் திலேயே கண்டறிவதற்கும். தடுப்பதற்கும். சிகிசசை தருவதற்கும் எளிதாக இருககும்; இந் நோயாளிகளையும் நீண்டகாலம் வாழச் செய்துவிடலாம. சுமார் பத்து இராததலகளுக்குமேல் அதிக எடையுள்ள குழந்தைகளைப் பெறுவது இரு நோய் மகளிருக்கு வரும் அறிகுறியாகும் என்று கூறுவர் ஆய்வாளர்கள்: ஏறக்குறைய இருபது யாண்டுக்குள் அவர்களை இந்நோய் தாக்கிவிடும் என்கின்றனர் அவர்கள்.

இதுகாறும் கூறிய நோய் அதிமதுர ரோகம் (Diabetes mellitus) என்னும் நீரிழிவு நோய் ஆகும். இந் நோயின் அறிகுறிகள் போன்ற பல கிலைகள் உளளன. இவை யாவும் மரபுவழியாக வருபவையல்ல. இவற்றைக் கண்டும் நாம் அஞ்சவேண்டியதில்லை.

sisteg #$j GJI*n (Diabetes insipidus) sr srgyib PGsusos நீரிழிவு நோய் உண்டு. இது பெயரளவில் மேற்குறிப்பிட்ட நோயைப் போன்றதென்றாலும் அதனைப்போல் இஃது அஞ்சத்தக்கதன்று இந் நோயாளரின் தாகவிடாய் மட்டுமீறி அதிகமாக இருககும்; அடிக்கடி நீர் கழிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். சில தொல்லை களைததவிரக் கேடுபயக்கும் நிலை இதனால் ஏற்படாது. இஃது